ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை (ஜுலை 30) முன்னிட்டு,
புலம்பெயர்ந்தோர், அகதிகள், கைதிகள், சுகாதாரப் பணியாளர்கள், கடற்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பராமரிப்புக்கான கத்தோலிக்க தேசிய ஆணையத்தின் தேசிய இயக்குநர் அருட்தந்தை அன்டன் சிறியான் வெளியிட்டுள்ள அறிக்கை.
ஐக்கிய நாடுகள் சபையால் வரையறுக்கப்பட்டபடி, மனிதக் கடத்தல் என்பது நவீனகால அடிமைத்தனத்தின் வடிவமாகும். மனிதர்களின் சட்டவிரோத வர்த்தகத்தை மோசடி அல்லது வற்புறுத்தல் மூலம் கொண்டுள்ளது. வணிக பாலியல் சுரண்டல் அல்லது கட்டாய உழைப்பு. என இது உலகில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வௌ;வேறு வடிவங்களில் இடம்பெறுகிறது. சிலர் விபச்சாரம், ஆபாசப் படங்கள் மற்றும் பிற பாலியல் பணிகளுக்காக கடத்தப்படுகிறார்கள். சிலர் விவசாயம், கடைகள் மற்றும் வீட்டு வேலைகளில் கட்டாய உழைப்பு முதலானவற்றுக்காக கடத்தப்படுகின்றனர்.
ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில், அதன் அனைத்து வடிவங்களிலும் தீமையை தீவிரமாக எதிர்க்கிறது. ஸ்ரீலங்கா கரிடாஸ் உடன் இணைந்து மனித கடத்தலுக்கு எதிராக ஆணைக்குழு போராடுகிறது. தேவாலயமானது அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடன் நெருக்கமாக செயற்படுகிறது. இதனால் நாங்கள் 'புலம்பெயர்வாளர்களின் குரல்' என்ற கூட்டணியாக சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என சொலிடேரிட்டி சென்டர் ஏற்பாட்டில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
திருச்சபையானது, ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 8 ஆம் திகதி மனித கடத்தலுக்கு எதிரான பிரார்த்தனைக்காக அந்த தினத்தை அர்ப்பணிக்கிறது. மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்தல் மற்றும் அனைத்து நாடுகளின் குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தப் பிரார்த்தனை இடம்பெறுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான திருச்சபை தேர்ந்தெடுத்த கருப்பொருள் 'மனித கடத்தல் இல்லாத பொருளாதாரம்' ஆகும். அது கவனத்தை ஈர்க்கிறது. மனித கடத்தலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று: பொருளாதார நிலையாகும். கொவிட் -19 தொற்றுநோயால் இந்த நிலைமை மேலும் அதிகரிக்கின்றன.
திருச்சபை கடத்தலின் இரண்டு அடிப்படை, ஆழமாக வேரூன்றிய காரணங்களை பகுப்பாய்வு செய்து அடையாளம் கண்டுள்ளது. ஏழ்மை மற்றும் இலாபத்தை அதிகரிப்பது பற்றி மட்டுமே அக்கறை கொண்ட ஒரு பொருளாதார அமைப்பு. இதனை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளை தேவாலயம் பாராட்டுகிறது.
ஆட்கடத்தல், குறிப்பாக தற்போதைய தொற்றுநோய் பரவல் நிலைமையுடன் அதிகரித்துள்ளது. உழைக்கும் உலகத்தையும், அதன் பழக்கவழக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் என்பனவற்றில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், உரிமைகள் மீறப்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக திருச்சபை கூறுகிறது.
ஒவ்வொருவருக்கும் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் கொள்கைகளை ஊக்குவிக்க நம்மை அர்ப்பணிப்பதன் மூலம் மட்டுமே, அவர்களின் மனித உரிமைகளை மதித்து, தனிநபர்களின் சமூக அங்கீகாரத்தையும் மதிப்பதைக் காணலாம்.
எனவே இந்த கூட்டணி எடுக்கும் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம், 'புலம்பெயர்ந்தோரின் குரல்' ஒருமித்த எண்ணம் கொண்ட நிறுவனங்கள் மற்றும் பல பங்குதாரர்களை ஒன்றிணைத்து இந்த நவீன கால அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுகிறது. 'தனியாக ஒருவர் வேகமாக செல்லலாம் ஆனால் ஒன்றாக நாங்கள் வெகுதூரம் செல்லலாம்.