பட்டதாரிகளுக்கான நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் வாக்குறுதி

பட்டதாரிகளுக்கான நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் வாக்குறுதி

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் விடயத்தில் உடனடியாக தலையீடு செய்வதாக அரச சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளதாக தொழிலற்ற பட்டதாரிகளின் ஒன்றிணைந்த மத்திய நிலையத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கொஸ்வத்தே மகாநாம தேரர் தெரிவித்துள்ளார்.



அவர் அண்மையில் அமைச்சின் செயலாளரை சந்தித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2020ஆம் ஆண்டு தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டபோது நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நாங்கள் அமைச்சுக்கு சென்றோம்.

இதன்போது அரச சேவைகள் அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் கிடைத்தது.

தற்போது இருக்கின்ற மேன்முறையீடு தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 பரவல் காரணமாக அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்த முடியாது உள்ளதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறு இருப்பினும் எந்த ஒரு பட்டதாரிக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது என அவர் உறுதி அளித்தார். அத்துடன் இந்த விடயத்தில் உடனடியாக தலையீடு செய்வதாகவும் எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image