மாகாண மட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வௌியிடுக!!

மாகாண மட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வௌியிடுக!!

 மாகாண மட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வௌியிட்டு போட்டிப்பரீட்சை நடத்தி வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க ஆவணம் செய்யுமாறு அரசிடம் கோருவதாக ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் மத்திய நிலையத்தின் அமைப்பாளர் மஹேஸ் அம்பேபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள தென் மாகாணசபை, சப்ரகமுவ மாகாணசபை மற்றும் கிழக்கு மாகாணசபை என்பவற்றில் ஆசிரியர் நியமனத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. எனினும் போட்டிப்பரீட்சை நடத்துவது தாமதிக்கப்பட்டு வருகிறது. போட்டிப்பரீட்சை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிப்பதில் தாமதித்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் , நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை அடையாளங்கண்டு அவற்றில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு அவ்வாய்ப்பை வழங்குமாறு நாம் கோரிக்கை விடுத்தோம். விரைவில் போட்டிப்பரீட்சைகளை நடத்தி பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்குவதை விரைவுபடுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகிறோம். நாட்டில் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு போட்டிப்பரீட்சை நடத்துவதற்கு மாத்திரம் சிரமம் உள்ளதாக நாம் நம்பப்போவதில்லை. எனவே நாம் மேலே குறிப்பிட்ட 3 மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் செயலாளர்களை சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாட தீர்மானித்துள்ளோம்.

அதேபோல் ஏனைய 6 மாகாணங்களிலும் கொஸ்வத்த மஹாநாம தேரரர் உட்பட பிரதிநிதிகள் சென்று கலந்துரையாட ஏற்பாடுகள் செய்துள்ளோம். இந்நிலையில் கொஸ்வத்த மஹாநாம தேரரை கைது செய்து எமது செயற்பாடுகளை இடைநிறுத்த முயற்சித்தால் அது தோல்வியிலேயே முடியும் என்பதை நாம் கூறிக்கொள்ள விரும்புகிறோம். சங்கம் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கான பங்களிப்பை வழங்குவோம். குறிப்பாக ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படாத அனைத்து மாகாணங்களிலும் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுமாறு நாம் அழுத்தம் செலுத்தவுள்ளோம். மத்திய அரசு, மாகாண அரசு என்பன இணைந்து ஏதோவொரு வகையில் 2020ம் ஆண்டு தொடக்கம் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்காதிருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சமூகத்தில் கருத்துகள் பரவி வருகிறன. அதற்கு இடமளிக்க முடியாது.

நாம் அரசாங்கத்திற்கு கூற விரும்புகிறோம். நியமனம் பெற்ற 18,000 பட்டதாரிகளை அடிப்படையாக கொண்டு மாகாண மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வேலையில்லா பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளவுள்ள வாய்ப்பினை இல்லாமலாக்க வேண்டாம் என்று கூறிக்கொள்கிறோம். அப்படி நடந்தால் அதற்கு எதிராக போராடவும் வீதிக்கு இறங்கவும் நாங்கள் தயாராகவுள்ளோம் என்பதை கூறிக்கொள்கிறோம். ஏனெனில் 18,000 நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு ஏற்கனவே தொழில்வாய்ப்பை வழங்கியாகிவிட்டது. மாகாண மட்டங்களில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை அவர்களை கொண்டு நிரப்ப முயற்சிக்கக்கூடாது என்ற திட்டமிடல் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்.

பாடசாலைகளில் அவர்களை நியமிப்பதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மாகாண மட்ட பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு வேலையில்லா பட்டதாரிகளை இணைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவேண்டும். அதுவும் விரைவாக செயற்படுத்தவேண்டும். எனவே நாம் இப்பிரச்சினை தொடர்பிலும் அதனை தீர்ப்பதற்கான செயற்றிட்டம் தொடர்பிலும் மாகாண ஆளுநர்கள், செயலாளர்களுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுப்போம். மஹாநாம தேரரை கைது செய்தமையினாலோ, தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்வதனாலோ எமது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாது. நாம் எவ்வாறு இணைந்து கஷ்டப்பட்டு ஒற்றுமையாக செயற்படுகிறோமோ அதேபோல் அனைத்து வேலையில்லா பட்டதாரிகளும் எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஒற்றுமையாக தைரியமாக இணைந்து போராட முன்வாருங்கள் என்று கூறிக்கொள்கிறோம்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image