மீண்டும் கூட்டு ஒப்பந்தத்திற்கு தயாராகவுள்ள கம்பனிகள்- வே. இராதாகிருஷ்ணன்

மீண்டும் கூட்டு ஒப்பந்தத்திற்கு தயாராகவுள்ள கம்பனிகள்- வே. இராதாகிருஷ்ணன்

 ஐந்து கம்பனிகள் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்திற்க தயாராக உள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரன தம்மிடம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

அட்டனில் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னனியின் தலைமை காரியாலயத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இன்று கம்பனிகள் தான்தோன்றித்தனமாக தோட்டங்களிலேயே காட்டு சட்டத்தினை அமுல்படுத்தி தோட்டங்களை நிர்வகிக்கின்றனர். இதற்கு விரைவில் முற்றப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் பேசிய போது, அவர் கூறியது போல் கூட்டு ஒப்பந்ததிற்கு தயாராக உள்ள ஐந்து கம்பனிகளுடன் உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்பார்த்து உள்ள 17 பெருந்தோட்ட கம்பனிகளும்; வெகுவிரைவிலே முன்வந்து கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தொழிலாளரகளின் பிரச்சினைகளை தீர்ப்பது சிறப்பானதாக அமையும்.

இந்த நாட்டில் சர்வதேச தொழில் சட்டம் தொழிலாளர் சட்டம் என்றெல்லாம் இருக்கும் நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த சட்டம் இருக்கின்றதா? இல்லையா? என்பதை அரசாங்கம் எங்களுக்கு புரிய வைக்க வேண்டும். பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் கதைத்துள்ளேன்.

மேலும் ரூபா 1000 சம்பளம் வழங்கப்பட்டதன் பின்னர் கம்பனிகள் தன்னிச்சையாக கூட்டு ஒப்பந்தத்தை நிராகரித்து அது செல்லுப்படியாகாது என்று கூறி இன்று உயர் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கின்றார்கள்.

ஆகவே நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தோட்ட முகாமையாளர்கள் தான் தோன்றி தனமாக தோட்டங்களிலே செயற்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது அதிலும் விஷேடமாக ஒரு தொழிலாளி தினமும் 20 கிலோகிராம் தேயிலை கட்டாயம் பறிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதுவரை தொழிலாளர்களுக்கு கிடைத்த நலத்திட்டங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன இந்நிலையில் தொழிலாளி ஒருவர் தவறு ஏதும் செய்தால் அதனை தோட்டத்தின் உன்ளேயே முகாமைத்துவத்தின் கீழ் தீர்ப்பது செல்லுப்படியாகுமா என்பதெல்லாம் பெரும் பிரச்சினையாக உள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் சுட்டிக்காட்டினார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image