பிராந்திய பொது பிரச்சினைகளில் ஒத்துழைக்க இந்தியாவும் இலங்கையும் இணக்கம்

பிராந்திய பொது பிரச்சினைகளில் ஒத்துழைக்க இந்தியாவும் இலங்கையும் இணக்கம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் இதுவரை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பலனளித்திருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயை எதிர்கொள்வதற்காக இந்திய அரசாங்கம் நல்கிய நிதி உதவி மற்றும் கொவிட் நிவாரண உதவிகளுக்காக இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தினேஷ் குணவர்தன நன்றிகளைத் தெரிவித்தார்.

பிராந்திய அமைப்புக்களான பிம்ஸ்டெக் மற்றும் ஐயோரா ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இரு அமைச்சர்களும் இந்தக் கலந்துரையாடலின் போது ஒப்புக்கொண்டனர். குறிப்பாக கொழும்புத் திட்டம் போன்ற பொதுவான தளங்களில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்துக்களும் இதன் போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இரு நாடுகளும் சந்திக்கும் கொவிட் தொற்றுநோய் சார்ந்த அபாயம் குறித்து இரு அமைச்சர்களும் விரிவாகக் கலந்துரையாடியதுடன், தற்போதைய நிலைமையை விரைவாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து பலமும் இந்தியாவுக்கு இருக்கும் என அமைச்சர் குணவர்தன இந்திய வெளியுறவு அமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஏறக்குறைய அரை மணி நேரம் நீடித்த இந்த உரையாடலின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஆர்வத்தின் பல முக்கியமான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

வெளிவிவகார அமைச்சு

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image