பட்டதாரி பயிலுநர்களுக்கான மகப்பேற்று விடுமுறைக்கு அமைச்சரவை அனுமதி
வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிலுநர் வழங்குதல் திட்டம் - 2020 இன் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண் பயிலுநர்களுக்கு மகப்பேற்றின் பின்னர் சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறைகள் நாடகள் தவிர்ந்த 84 நாட்கள் விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இம்மாதம் மூன்றாம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து பட்டதாரி பயிலுனர்களுக்கும் குறித்த பயிற்சி காலப்பகுதியில் மாதாந்தம் சம்பளத்துடன் கூடிய இரு நாள் விடுமுறை வழங்குவதற்கும் மேலதிகமாக எடுக்கும் விடுமுறைகளுக்கு சம்பளமற்ற விடுமுறையாக கருதி 1/30 இற்கு சமமான தொகை வீதம் குறைக்கப்படும்.