அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைத்தல்-தற்போதைய நிலை

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைத்தல்-தற்போதைய நிலை

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைப்பது தொடர்பான வேண்டுகோள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் கோரியுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியாராச்சியின் கையெழுத்துடன் கல்வியமைச்சின் செயலாளர் பேராசியர் கபில குணவர்தனவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த மார்ச் மாதம் 3ம் திகதி தாங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கமையவாக தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் MN-04 சம்பள தரத்தை கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவை விதிமுறைகமைவாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டது.

மேலும் கல்வியமைச்சு, மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழு ஆகியன இணைந்து கலந்துரையாடி ஒருமித்த தீர்மானம் எட்டப்பட்டதையடுத்து அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு அவ்வாய்ப்பை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடுவது என்ற தீர்மானம் எட்டப்பட்டது.

அதற்கமைய சேவையில் இணைத்தல் செயற்பாடு தொடர்பில் அமைச்சரவை அனுமதிக்கான பத்திரம் / வர்த்மானி அறிவித்தல் தயார்படுத்தப்பட்டு வருமாயின் தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை MN - 04 சம்பள தரத்த்தைக் கொண்ட அதிகாரிகளை அரச சேவையில் இணைய விண்ணப்பிக்கும் போது வயதெல்லையை கவனத்திற்கொள்ளாமல் வாய்ப்பு வழங்குமாறு கோருகிறோம்.

மேற்படி விடயம் தொடர்பில் தாங்கள் உட்பட உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு திகதி மற்றும் நேரம் ஒதுக்கித் தருமாறு தயவுடன் கோருகிறோம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image