அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - பயிலுனர்களுக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுனர்களுக்கு சுற்றறிக்கைக்கு அமைய விடுமுறை வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடவுள்ளதாக ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அவசர ஆட்சேர்ப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமை தொடர்பிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட உள்ளதாகவும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுனர்களில், அலுவலகமயப்படுத்தப்பட்டவர்ள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களை தொற்றுநோய்க்கு உட்படுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சுற்றறிக்கைக்கு அமைய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
கொவிட் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.
சுகாதார பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும்.
என்று ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.
பட்டதாரிகள் - குறைவருமானம் ஈட்டுவோருக்கான தொழில்வாய்ப்பு: மத்திய வங்கியின் தகவல்