வேலையில்லா பட்டதாரிகளை சேவையில் இணைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சிகைள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரமொதுக்கித் தருமாறு ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் மத்தியநிலையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் கொண்டாட்டங்களை நடத்துவது, பாராளுமன்றத்தை கூட்டுவது, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை திறந்து விடுவது என அரசாங்கம் பொறுப்பற்றவகையில் செயற்பட்டு வருகிறது. எனினும் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவது தொடர்பிலான கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்கித்தராமை கேலிக்குரிய விடயமாகும் என்ற ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் மத்திய நிலையத்தின் அழைப்பாளர் மகேஷ் அம்பேபிட்டிய தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டிலிருந்து பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டம் மற்றும் 60,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளதாக அம்பேபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.