வேலையில்லா பட்டதாரிகள் போராட்டத்திற்கு மீண்டும் வெற்றி கிட்டுமா?

வேலையில்லா பட்டதாரிகள் போராட்டத்திற்கு மீண்டும் வெற்றி கிட்டுமா?

அரசாங்கம் உறுதியளித்தது போன்று இதுவரை 60,000 வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்க தவறியுள்ளமையினால் அதனை எதிர்த்து போராட ஆரம்பித்துள்ளது.

அனைத்து வேலையில்லா பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பினை வழங்குவதாக உறுதியளித்தே ஆளும் அரசாங்கம் பதவிக்கு வந்தது. எனினும் அந்த உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் வேலையில்லா பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தபோதிலும் வேலையில்லா பட்டதாரிகள் மீண்டும் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மார்ச் மாத தேர்தலை நோக்காக கொண்டு தொழில்வாய்ப்பினை வழங்கும் நடவடிக்கை ஆரம்பமானது. எனினும் அது வெற்றியளிக்கவில்லை. தொடர்ந்து செப்டெம்பர் மாதம 43616 பட்டதாரிகளுக்கும 2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் கட்டமாக 8076 பேருக்கும் தொடர்ந்து மூன்றாம் கட்டமாக 897 பேருக்கும் என மூன்று கட்டங்களாக இதுவரை 52,589 பேருக்கு பயிலுநர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் 60,000 பேருக்கு இதுவரை தொழில்வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் 7411 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் 2020ம் ஆண்டு பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகள் பல மாதங்களாக அதிகாரிகளை சந்தித்து தொழில்வாய்புகளை வழங்குமாறு வாய்மூலமான மற்றும் எழுத்து மூலமான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். எனினும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமை காரணமாக நாம் மீண்டும் போராட்டத்திற்கு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று சங்கத்தின் அழைப்பாளர் தென்னே ஞானரத்ன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image