அதிகாரிகளின் கவனயீனத்தால் தொற்று அபாயம்- ரயில் திணைக்கள ஊழியர் சங்கம்

அதிகாரிகளின் கவனயீனத்தால் தொற்று அபாயம்- ரயில் திணைக்கள ஊழியர் சங்கம்

அரசாங்கம் எத்தனை சுற்றுநிரூபங்கள் வௌியிட்டாலும் உரிய அதிகாரிகளின் கவனயீனத்தினால் சில சுற்றுநிரூபங்கள் பயனற்றனவாகியுள்ளதாகவும் இதனால் புகையிரத திணைக்கள ஊழியர்கள் மற்றும் புகையிரதப் பயணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்கள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டில் கொவிட் 19 மிக வேகமாக பரவி வருகிறது. எனினும் அதற்கேற்றாற்போல ரயில் திணைக்கள ஊழியர்கள் மத்தியிலும் பரவ ஆரம்பித்துள்ளது. தற்போது றத்மலான இயந்திர பணியிடம் உ்டப பலவியடங்களில் தொற்று ஏற்பட்டதால் மூடப்பட்டுள்ளன.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுததுவதற்கு சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டி மற்றும் 02/2021(01) அரச நிருவாக சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளளை ரயில் திணைக்களத்தினுல் செயற்படுத்த உரிய அதிகாரிகள் தவறியுள்ளனர். திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளில் காணப்படும் அதிக வெற்றிடங்கள் மற்றும் ஆளணி பற்றாக்குறை காரணமாக அத்தியவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுத்து செல்வதில் பாரிய சிக்கல்களை அதிகாரிகள் எதிர்கொண்டுள்ளனர். வாரத்திற்கு இரு நாட்களுக்கு திணைக்கள ஊழியர்களுக்கு உரித்தான விடுமுறைகளை குறைக்காமல், சேவைக்கு சமூகமளிக்காமல் இருப்பத்கு மேற்கூறப்பட்ட சுற்றுநிரூபத்தில் ஆலோசனை வழங்கப்படடுள்ளது. எனினும் விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பல நாட்கள் பணியாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ரயில் திணைக்கள ஊழியர் மத்தியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு உரிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டும் என அதிகாரிகள் தெரிவித்தாலும் அவ்வாறான செயற்பாடுகள் ரயில் நிலையங்களில் முன்னெடுக்கப்படவில்லை. என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சமூக இடைவௌியிடும் பஸ்களில் பயணிக்க இயலுமான போதிலும் சரியான செயற்றிட்டமொன்று இல்லாத காரணத்தினால் அவ்விடயத்தில் நாம் தோல்வி கண்டுள்ளோம்.

அரசு எத்தனை சுற்றுநிரூபங்களை வௌியிட்டாலும் கூட, அவை தொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தாமையினால் சில சுற்றுநிரூபங்கள் பயனற்று போகின்றன. இதனால் திணக்கள ஊழியர்கள் மத்தியிலும் பயணிகள் மத்தியிலும் கொவிட் பரவலுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் , கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்காக இரவு தபால்சேவை உட்பட, 20 ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image