மலையகத்தில் புதிய தொழிற்சங்கம்!

மலையகத்தில் புதிய தொழிற்சங்கம்!

சட்டதிட்டங்களையும் பாதுகாப்பதற்காகவென மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்கியதாக அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ்ஸின் பொதுச் செயலாளர் அம்மாசி எஸ். நல்லுசாமி தெரிவித்தார்.

குறித்த தொழிற்சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ​நேற்று (11) ஹட்டன் சிவசுப்பிரமணிய தேவஸ்த்தானத்தில் இடம்பெற்ற விசேட பூஜைகளுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த பூஜை வழிபாடுகளினை தொடர்ந்து தமது புதிய தொழிற்சங்கம் பற்றி விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று ஹட்டனில் நடைபெற்றது.
அதில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தொழிற்சங்கங்கள் என்பது தொழிலாளர்களின் உரிமையினை பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகும் எனினும் இன்று தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். அதற்கு நான் தொழிற்சங்கங்களை குறை கூறவில்லை நடைமுறையிலேயே சிக்கல்கள் இருக்கின்றன என்பதையே நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.

மேலும், மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் இருந்தாலும் கூட அவை தொழிலாளர் உரிமை தொடர்பாக அக்கறை கொள்ளாது தங்களது சுயநலத்திற்காக அரசியல் லாபத்திற்காக இயங்கு நிலையினையே காணுகின்றோம். தோட்டத் தொழிலாளர்கள் உரிமைகள் தொடர்பாக எந்த ஒரு தொழிற் சங்கமும் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. இன்று தொழிலாளர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் ரீதியான எத்தனையோ சட்டங்கள் உள்ளன.

குறிப்பாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தொழிலாளர்களுக்காக எண்ணற்ற சட்டங்களை இயற்றியுள்ளது. அதிலுள்ள கொள்கைகள் பிரகடணங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்று கேட்டால் அது கேள்விக்குறியே. சுகாதாரம் மற்றும் தொழில் பாதுகாப்பு தொழிலாளர்களுக்கு இருக்கின்றதா? என்று பார்த்தால் மலையகத்தில் அதுவும் கிடையாது. அதற்கு சிறந்த உதாரணமாக இன்று தொழிலாளர்கள் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகின்றனர், தேன் பூச்சி, குளவி கொட்டுதல்களுக்கு ஆளாகின்றனர். இது போன்று எத்தனையோ துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஆனால் இவை எதற்குமே எந்த தொழில் பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை என்று தான் கூற வேண்டும்.

அரசாங்கம் 1992 ஆம் ஆண்டு கம்பனிகளுக்கு இந்த தோட்டங்களின் முகாமையை ஒப்படைக்கும் போது ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தம் எங்கே? அந்த ஒப்பந்தத்தில் கம்பனிகள் என்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கம்பனிகன் முதலீடுகள் செய்யும் என்று அநத ஒப்பந்ததில் கூறப்பட்டு;ள்ளது ஆனால் முதலீடுகள் செய்யப்படுகின்றனவா?. நாங்கள் எப்போதும் குறை கூறிக்கொண்டு இதனை செயற்படுத்த விரும்பவில்லை கம்பனிகளிடம் பேசி அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே செயப்படுவோம்.

2015 ஆண்டு மே முதலாம் திகதி நுவரெலியாவில் ரூபா 1000 சம்பளம் தொடர்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் இன்று காணப்பம் நாணயமாற்று வீதத்துடன் ஒப்பிடுகையில் 1456 ரூபா பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.

எனவே ஆயிரம் ரூபா என்பது வெறும் வெத்து வேட்டு என்று தோன்றுகிறது. ஆகவே இனிவரும் காலங்களிலாவது ஒரு கொள்கை ரிதியாக தொழிற்சங்க செயப்பாடுகளை முன்னெடுக்க எத்தணித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image