கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டது யாழ் நகரம்

கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டது யாழ் நகரம்

யாழ் நகரப்பகுதியில் 80 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து அப்பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 670 பேருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 80 பேருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு குழுவின் அவசர சந்திப்பினையடுத்து இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எ. கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். காங்கேசன்துறை அதிவேகபாதை, யாழ் பிரதான பஸ் நிலையம், வைத்தியசாலை வீதி, யாழ் பொதுச்சந்தை மைதானம், திருநெல்வேலி பொதுச்சந்தை மைதானம் மற்றும் யாழ் துறைமுகம் என்பன கொவிட் 19 தொற்று பரவும் பகுதிகளாக அடையாளங்காணப்பட்டு முடக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image