அரச பல் மருத்துவர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

அரச பல் மருத்துவர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

இன்று (22) 8 மணி தொடக்கம் நாளை (23) காலை 8 மணி வரையானான அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க அரசாங்க பல் மருத்துவர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஒன்றரை வருடங்களாக முன்வைக்கப்பட்டும் இதுவரை தீர்வு காணப்படாத நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வடையாள வேலைநிறுத்தப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச பல் மருத்துவர் சங்கத்தின் உப தலைவர் தமிந்த மண்டாவெல எமது இணைய தலையத்திற்கு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் தற்போதைக்கு வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயது 61 என குறிப்பிட்ட சுற்றுநிருபம் அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளது. அதில் பல் மருத்துவர்கள் உள்ளடக்கப்படவில்லை. எனவே அதில் பல் மருத்துவர்கள் உள்ளவாங்கப்படல், 2020ம் ஆண்டுக்கான இடமாற்றம் இதுவரையில் செயற்படுத்தப்படாமை, நிலவும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை மற்றும் பல் மருத்துவப்பட்டப்படிப்பை பூர்த்தி செய்து பயிலுநர்களாக சேவையில் இணைந்துகொண்ட பயிலுநர் வைத்தியர்களுக்கு அவசிய நிதியொதுக்காமை ஆகிய 4 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இவ்வடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.

சம்பள அதிகரிப்பு உட்பட தமது நன்மைக்கான கோரிக்கைகளை முன்வைத்து இவ்டையாள வேலைநிறுத்தப்போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள சங்கத்தின் உபதலைவர் ஒட்டுமொத்த துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெறும் நோக்கில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

எனினும், மகப்பேற்று மருத்துவமனைகள், புற்நோய் வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலை போன்ற அவசர சிகிச்சைகள் முன்னெடுக்கவேண்டிய வைத்தியசாலைகளில் தமது பணி தொடரும் என்றும் ஏனையான நாளாந்த சிகிச்சை செயற்பாடுகள் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பல் மருத்துவர்கள் தமது தொழில்சார் பிரச்சினைளை தீர்க்க நீண்டகாலமாக பேச்சுவார்த்தைகள் நடத்தியபோதிலும் இதுவரை அதற்கான தீர்வுகள் கிடைக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அரச பல் மருத்துவச் சங்கத்தின் செயலாளர் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image