விமானநிலையத்தில் தனியார் பரிசோதனை கூடம் அமைக்க முயற்சியா?

விமானநிலையத்தில் தனியார் பரிசோதனை கூடம் அமைக்க முயற்சியா?

கட்டுநாயக்க விமானநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அரச மருத்துவ பரிசோதனை நிலையத்தை மூடிவிட்டு தனியார் பரிசோதனை நிலையத்தை திறக்க முயற்சிகள் நடைபெறுவதாக அரச மருத்து பரிசோதனை தொழில்நுட்பவியலாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

சீன கொவிட் 19 தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தொழில்நுட்ப குழுவின் அனுமதி கிடைத்துள்ளதா என்பதையும் அரசாங்கம தௌிவுபடுத்த வேண்டும் என்றும் அச்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர அரச தலைமைகளின் அழுத்தத்தின் காரணமாகவே சீன தடுப்பூசிக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தனியார்துறையினர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதி அளித்தால், தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்காது.

"பணத் திறனை அடிப்படையாகக் கொண்ட தடுப்பூசிகளை விநியோகிக்க அனுமதிப்பதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியாது. தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது முற்றுமுழுதாக அரசாங்க செயல்முறையாக இருக்க வேண்டும்" என்று ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image