ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான வர்த்மானி அறிவித்தல் இடைநிறுத்தம்

மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த போட்டிப்பரீட்சையை விரைவில் நடத்தி முடிக்கும் நோக்கில் ஒன்லைன் ஊடாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமையினால் இவ்வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,

இதற்கமைய, 11.03.2021 தொடக்கம் ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. விண்ணப்பங்கள் ஒன்லைன் ஊடாக மட்டுமே செலுத்தப்படவேண்டும். போட்டிப்பரீட்சைக்கு ஏற்கனவே பணம் செலுத்தியவர்கள் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கல்வியமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image