ர. ராஜேஸ்வரன்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் ரூபா 1000 சம்பளம் என்பது பல வருடங்களை கடந்து இன்றும் பேசு பொருளாகவே காணப்படுகின்றது. கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமக்கு என்ன நடக்க போகின்றது என்று அறியாது தொழிலாளர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.
பெருந்தோட்ட தொழிலார்களின் இந்த ரூபா 1000 சம்பளம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் ரொஷான் இராஜதுரையிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போது அவர் சம்பள நிர்ணய சபையினால் சம்பளம் தீர்மானிக்கப்பட்டடுள்ளது. அதன் அடிப்படையில் அந்த தீர்மானம் இலங்கை அரசால் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டால் அதனை வழங்கவதற்கு நாம் கடப்பட்டுள்ளோம்; என்றார்.
மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் சம்பள நிர்ணய சபைக்கு சென்றதால் நாம் கூட்டு ஒப்பந்ததில் இருந்து விலக்கப்பட்டுள்ளோம். ஒரு நாளுக்கான குறைந்த பட்ச சம்பளமே சம்பள நிர்ணய சபையின் விதிமுறை அதனை செலுத்த நாம் கடப்பட்டுள்ளோம். எனினும் கூட்டு ஒப்பந்த நிபந்தனைகள் மற்றும் விதிகளில் இருந்து நாம் விலக்கப்பட்டுள்ளதால் அவை இதில் தாக்கம் செலுத்தாது என்றும் தெரிவித்தார்.
இந்த கூட்டு ஒப்பந்தம் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்ட அப்போது இருந்த தொழிற்சங்க தலைவர்கள் தொழிலார்கள் தொடர்பாக சிந்தித்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும் வகையில் இந்த கூட்டு ஒப்பந்ததை தயாரித்தார்கள். அது ஒரு பக்கத்திற்கு சார்பானதாகவே காணப்பட்டிருந்தாலும் அதனால் எமக்கு பெரிய பிரச்சினை இல்லை. இந்நிலையில் அவர்களே கூட்டு ஒப்பந்ததில் இருந்து விலகினால் எமக்கு எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும் வேலை நாட்கள் தொடர்பாக எமக்கு எதுவும் கூற முடியாது. கூட்டு ஒப்பந்ததின் படி வருடத்திற்கு 300 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும். சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கடப்பாடு இருந்தது. ஆனால் சம்பள நிர்ணய சபை ஊடாக சமபளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சட்டரீதியாக தொழிலாளர்கள் வேலை செய்யும் நாட்களுக்கு குறைந்த பட்ச சம்பளத்தை கொடுக்க வேண்டும். அதாவது எம்மால் செலவை ஏற்க கூடிய நாடகளின் கால எல்லைக்கு அமைவாகவே தொழில் கொடுக்க முடியும் என்ற விடயத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
.இந்நிலையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் கம்பனிகள் ரூபா 1000 சம்பளம் தர முடியாது என்று கூறி இழுத்தடிப்பு மட்டுமே நடைபெறுகின்றது. இதில் எந்த ஆக்கப்பூர்வமான முடிவும் இல்லை ரூபா 1000 சம்பளம் கொடுக்கப்பட்டாலும் எத்தனை நாள் வேலைக்கிடைக்கும் என்று உறுதியான நிலைப்பாடு ஏதும் இல்லை ரூபா 1000 மட்டுமே எமது பிரச்சினை இல்லை எமது உரிமைகளையூம் தொழிலாளர் நலன் சார்ந்த விடயங்களையும் விட்டுக் கொடுக்க முடியாது. மேலும் எத்தனை நாள் வேலை கிடைக்கும் எவ்வளவு கொழுந்து பறிக்க வேண்டும் என்று தௌிவாக கூறப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம், கூட்டு ஒப்பபந்ததில் கையொப்பம் இடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் இனைந்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து தன்னிச்சையாக ஒரு தொழிற்சங்கத்திற்கு மாத்திரம் முடிவெடுத்து, அந்த கூட்டு ஒப்பந்ததில் இருந்து விலகி சலுகைகளை விடடுக் கொடுக்க முடியாது என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ்; தெரிவித்தார்.
மேலும்; முதலாளிமார் சம்மேளனம் மட்டும் முடிவு செய்து இந்த கூட்டு ஒப்பந்ததில் இருந்து தன்னிச்சையாக விலக முடியாது எனறம் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் யார் கூறுவது சரியானது. எமக்கு என்ன நடக்கப் போகின்றது என்று எதையும் முடிவு செய்ய முடியாது பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலவு காத்த கிளியாக இன்னும் எவ்வளவு காலத்திற்கு காத்திருக்க போகின்றார்கள் இவர்களின் இந்த ஏக்கத்திற்கு முடிவூகட்டுவதற்கு யார் முனவர போகின்றார்கள் என்பதை காலம் தான் கூறவேண்டும்.