அனுமதிக்கப்படாத தடுப்பூசிகளை தருவிப்பதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்- தாதியர் சங்கம்

அனுமதிக்கப்படாத தடுப்பூசிகளை தருவிப்பதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்- தாதியர் சங்கம்

உலக சுகாதார தானத்தினால் அங்கீகரிக்கப்படாத கொவிட் 19 தடுப்பு மருந்துகளை நாட்டுக்கு தருவிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசாங்க தாதிமார் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Covishield தடுப்பு மருந்துக்கு மேலதிகமாக ரஷ்யாவில் தயாரிக்கப்படும் Sputnik V , சீனாவில் தயாரிக்கப்படும் Sinipharm ஆகியவற்றை நாட்டுக்கு தருவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கொவிட் 19 தடுப்பாக ஜனாதிபதி செயலணியின் பிரதானி லலித் வீரதுங்க அண்மையில் தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வௌியிட்டபோதே அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய இவ்வாறு கூறியுள்ளார்.

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்படும் கொவிட் தடுப்பு மருந்துகள் தொடர்பான ஆய்வறிக்கை குறித்து உலக சுகாதார தாபனம் சந்தேகம் வௌியிட்டுள்ளது. அத்தகைய அனுமதி வழங்கப்படாத தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு எமது சங்கம் இணங்கப்போவதில்லை.

இத்தடுப்பூசிகள் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபை என்பவற்றை தொடர்புகொண்டு வினவியபோதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றும் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்

Author’s Posts