ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்த இந்திய உயஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜப்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்புக்களில்; கொழும்பு துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை 100 சதவீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுத்துவதற்கு நேற்று முன்தினம் அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இந்தப் பின்னணியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், குறித்த சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.