கொவிட் 19 இரண்டாம் அலை பரவலினால் சுமார் 100 வைத்தியர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தில் பேசவல்ல அதிகாரியான டொக்டர் ஹரித்த அளுத்கே நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போது சுமார் 40 வைத்தியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளாந்தம் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. எதிர்வரும் இரு வாரங்களில் கொவிட் 19 தொற்றாளர்கள் இறக்கும் விடயம் குறித்த நாம் கதைக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் எமது நேர்மறையான நோயாளர்களின் எண்ணிக்கை 5.5 ஆக அதிகரித்துள்ளமையாகும். ஒரு மாதத்திற்கு முதல் 3 வீதமாக இருந்தது. தற்போது எல்லை கடந்தாயிற்று. நாளாந்தம் அடிப்படை எங்கேயுள்ளது என்று தெரியாத நோயாளர்கள் பலர் அடையாளங்காணப்படுகின்றனர். இதில் அடிப்படை என்னவென்றால் சமூகப்பரவல். எனவே இவ்வுண்மைக்கு நாம் முகங்கொடுத்து முன்நோக்கிச் செல்ல வேண்டும் என்று நாம் நம்புகிறோம். எமது சுகாதார சேவை ஊழியர்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளில் நாளாந்தம் பலருக்கு நேர்மறையென காட்டுகிறது. வைத்தியர்கள், தாதியர் மற்றும் ஏனைய ஊழியர்கள் நாளுக்கு நாள் நோயாளர்களாகி வருகின்றனர்.
இரண்டாம் அலையில் மாத்திலர் சுமார் 100 வைத்தியர்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்தநிமிடம் 40 வைத்தியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் நெருங்கி பழகிய சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சையளிக்க வைத்தியர்கள் இருப்பார்களா? வைத்தியர்கள் தொற்றுக்குள்ளாகி ஒருபுறம் சிகிச்சை பெறுகின்றனர். மறுபுறம் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தனர்.