தகமைக்கு குறைந்த அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு பட்டதாரி நியமனங்கள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அலுவலக உதவியாளர் மற்றும் தொழிலாளர் சேவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பணியாற்றுகின்றமை அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பட்டதாரி நியமனங்கள் வழங்குமாறு பட்டதாரிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. அதற்கமைய, வயதெல்லை குறித்து கவனத்திற்கொள்ளாமல் பட்டதாரி நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அரச நிருவாக அமைச்சு தெரிவித்துள்ளது.