பல்கலைக்கழகங்களில் வௌிவாரி பட்டப்படிப்புக்கு புதிய மாணவர்

பல்கலைக்கழகங்களில் வௌிவாரி பட்டப்படிப்புக்கு புதிய மாணவர்

பல்கலைக்கழகங்களில் வௌிவாரி பட்டப்படிப்புக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைகழகங்களில் வௌிவாரியாக நடத்தப்படும் கலை பட்டப்படிப்பை தொழில் இலக்காக கொண்ட பட்டபடிப்பை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பட்டப்படிப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான முன்மொழிவுகளை வழங்குமாறுத பல்கலைக்கழகங்களில் கோரப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகசபை மற்றும் செனட் சபையின் அனுமதிக்கமைய மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் குறித்த முன்மொழிவுகளை வழங்குமாறு பல்கழகங்களில் கோரப்பட்டுள்ளது.

அதுவரை வௌிவாரி பட்டப்படிப்புக்கு புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கலைத்துறை பட்டப்படிப்பில் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புச் செய்யும் முறை குறித்து ஆராய்ந்து முன்மொழிவுகளை வழங்க பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவும் குழுவொன்றை நியமித்துள்ளது. அதன் முன்மொழிவுகள் உபவேந்தர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வௌிவாரி பட்டப்படிப்பை நடைமுறைப்படும் மூன்று வருடங்களும் ஆங்கில மொழி கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என குறித்த குழு முன்மொழிந்துள்ளது. மேலும செயன்முறை பரீட்சையும் உள்ளடக்கப்பட்டதாக தகவல் தொழில்நுட்பக் கல்விக்கு வசதிகள் வழங்கப்படவேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பல்கலைக்கழகங்களில் உள் கலை பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதமும் குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, 2016 இல் கலை பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் 16 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் 2017 ல் 20.9 சதவீதத்திலிருந்து 2018 ல் 12.2 சதவீதமாகக் குறைந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image