போதைப்பொருளுக்கு அடிமையான பார ஊர்தி சாரதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
பார ஊர்திகளுக்காக புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு வருபவர்களும் பழைய அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு வருபவர்களும் கடந்த ஒரு வருடத்திற்குள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
மருத்துவ பரிசோதனையின் போது போதைப்பொருள் பாவனை உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பார ஊர்தி சாரதிகள் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம் : Newsfirst.lk