கம்பளையில் ​வேகமான பரவும் கொரோனா

கம்பளையில்  ​வேகமான பரவும் கொரோனா

கம்பளை போதனா வைத்தியசாாலையில் கொரோனா தொற்று வேகமான முறையில் பரவி வருகிறது.

இதுவரை 50 மருத்துவர்கள், 19 தாதியர் உத்தியோகத்தர்கள், 13 கனிஷ்ட உத்தியோகத்தர்கள், 4 நோயாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்ற சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, கொவிட் 19 உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவர் ஒருவர் வழங்கிய விருந்தில் கலந்துகொண்ட வைத்தியசாலை பொலிஸ் பிரிவினரும் தற்போது கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கம்பளை வைத்தியசாலையில் வௌிநோயாளர் பிரிவு, மற்றும் சில வாட்டுகள் ஏற்கனவே தற்காலிகமா மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சமில் விஜேகோன் தெரிவித்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சில கர்ப்பிணித் தாய்மார்கள் கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவு தற்காலிகமான மூடப்பட்டுள்ளது. எனினும் தொடர்ச்சியாக அதிக உடல் வெப்பத்துடன் வைத்தியசாலைக்கு வருகைத் தந்த வண்ணம் உள்ளனர்.

கொவிட் 19 உறுதிப்படுத்தப்பட்ட அக்குறனை பிரசேத்தை சேர்ந்த மருத்துவர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றலாகி டிசம்பர் 4ம் திகதி செல்லவிருந்த நிலையில் இரு விருந்துகளை மருத்துவமனை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். அவருடைய மனைவியும் ஒரு மருத்தவர். அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, வைத்தியருக்கு கடந்த டிசம்பர் மாதம் 6ம் திகதி கொவிட் தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிலோன் டுடே 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image