ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய சுவசெரிய ஊழியர் சங்கத்தின் தலைவர், உபதலைவர் மற்றும் உப செயலாளர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'சுவசெரிய'- 1990- அம்பியுலன்ஸ் சேவையின் ஊழியர்கள் பணியை முன்னெடுத்து செல்ல தடையாக உள்ள குறைப்பாடுகள் குறித்த உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தும் வகையில் ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக இப்பணி இடை செய்யப்பட்டுள்ளது.
'சுவசெரிய' அம்பியுலன்ஸ் சேவையில் நாடு முழுவதும் சுமார் 1364 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் குறித்த சேவையை முன்னெடுத்து செல்ல காத்திருப்பதற்கு பொலிஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வசதிகள் இல்லாமை, சுகாதார வசதிகள் இல்லாமை உட்பட பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 24ம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது. இதனால் இவர்களுடைய பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவி மயுமி பிரியங்கிக்கா வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இம்மூவருடைய பணி இடைநிறுத்தம் குறித்த 1990 சுவசெரிய சேவையின் மனிதவள முகாமையாளர் கையெழுத்திட்ட கடிதம் பிரதான கட்டளை அதிகாரியினூடாக நேற்று முன்தினம் (25) இரவு 8.00 மணிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவி மேலும் தெரிவித்துள்ளார்.