20, 22 கிலோ கொழுந்து பறிக்க தொழிலாளர்களை கட்டாயப்படுத்தும் கம்பனிகள்

20, 22 கிலோ கொழுந்து பறிக்க தொழிலாளர்களை கட்டாயப்படுத்தும் கம்பனிகள்

பெருந்தோட்ட தொழிலாளர்கள், நாளாந்தம் 20 முதல் 22 கிலோகிராம் கொழுந்து பறிக்கவேண்டும் என பெருநதோட்டக் கம்பனிகள் பெருந்தோட்ட தொழிலாளர்களை வஞ்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குற்ம் சுமத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (04) கருத்து தெரிவித்தபோது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். சீரற்ற வானிலையின் காரணமாக பதுளை, நுவரெலியா பிரதேசங்களில் மண்சரிவு, வெள்ளப்பெருக்கின் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் மனிதாபிமானமற்ற முறையில், 20 கிலோ 22 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்று பெருந்தோட்ட தொழிலாளர்களை வஞ்சிக்கும் செயற்பாடுகளை மிகவும் சூட்சுமமாக செய்து கொண்டிருப்பது தொடர்பிலும் எங்களுக்கு தகவல் வந்த வண்ணம் இருக்கின்றன.

பெருந்தோட்ட நிறுவனங்கள் மனிதாபிமான முறையிலேயே நடந்துகொள்ள வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் இலங்கையின் தொழில் சட்டத்தை மீறி அவை செயற்படுகின்றன. மிக விரைவில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நிறுவனங்கள் தள்ளப்படும்.

தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டிய கட்டத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆகவே அதற்கான செயற்பாடுகளை மிக விரைவில் நாங்கள் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை இருக்கின்றது.

இதேநேரம், 5000 ரூபா கொடுப்பனவு மிகவும் அரசியல் ரீதியிலும், மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பனவு கிடைப்பதற்கான எந்த ஒரு ஏற்பாடுகளும் அரசாங்கத்தின் மூலமாக மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாற்று இருக்கின்றது அதனை நாங்களும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

நிவாரணங்கள் எவையும் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்திலே தடுப்பூசிகள்கூட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரையில் முறையாக சென்றடையவில்லை. எந்த ஒரு தோட்டங்களுக்கும் தடுப்பூசியை கொடுக்கப்படவில்லை. என்பதும் ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. ஆகவே பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் பொறுப்பு வாய்ந்த பெருந்தோட்ட கம்பனிகள் மனிதாபிமான அடிப்படையில் செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது என்பதை நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே தெரிவிக்க விரும்புகின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image