மலையகத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை எவரும் வேலைக்கு அனுப்பக்கூடாது என்றும், அதனையும் மீறி தொழிலுக்கு அனுப்புபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். உயிரிழந்த அச்சிறுமியின் ஆத்மா சாந்தி அடைய எதிர்வரும் வியாழக்கிழமை டயகமைக்கு நாம் நேரடியாக சென்று நினைவேந்தல் நகழ்வொன்றை நடத்தவுள்ளதாகவும், அன்றைய தினம் மலையக உறவுகள் தத்தமது வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை எவரும் தொழிலுக்கு அனுப்பக்கூடாது என்றும், அதனையும் மீறி தொழிலுக்கு அனுப்புபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்காக, தொழில் பயற்சி நிலையம் ஊடாக தொழில் பயிற்சி திட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், தொடர்பில் இரண்டு வகையான விசாரணைகளைக் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
15 வயது சிறுமியை பணிக்கு அமர்த்தியமை தொடர்பிலும், அவரின் மரணம் தொடர்பிலும் விசாரணைகளைக் கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.