நீங்கள் ஆசிரியராகும் எதிர்பார்ப்பில் உள்ளவரா?  18,000 பேரை ஆட்சேர்க்க நடவடிக்கை

நீங்கள் ஆசிரியராகும் எதிர்பார்ப்பில் உள்ளவரா?  18,000 பேரை ஆட்சேர்க்க நடவடிக்கை
எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஏற்படும் அவசியத் தன்மைக்கு அமைய அண்மையில் ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளை அந்தப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, தற்போதைய அரசாங்கத்தினால் அரச சேவைக்காக 53,000 பட்டதாரிகள் புதிதாக ஆட்சேர்க்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு ஓராண்டு கால பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
அவர்களுள் 18,000 பேரை அரச பட்டதாரி ஆசிரியர்களாக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கல்வி அமைச்சினால் மேலும் கோரிக்கை விடுக்கப்படுமாயின், மேலதிக தரப்பினரையும் வழங்கக்கூடிய இயலுமை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நான்கு கட்டங்களின் அடிப்படையில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில்,  200க்கும் குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட 3,000 பாடசாலைகளை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image