பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 10 சுகாதார தொழிற்சங்கங்கள், இன்று (10) காலை 8 மணிமுதல் நாளை (11) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
35,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கக் கோரி, பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 10 சுகாதார தொழிற்சங்கங்கள் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
மருத்துவர்களின் Disturbance, Availability and Transport (DAT) கொடுப்பனவை ரூ.35,000 வில் இருந்து 70,000 ரூபாவாக அதிகரிக்கவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின்ஆய்வுக் கொடுப்பனவை 25% இனால் அதிகரித்து ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்கவும் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், குறித்த பணிப்புறக்கணிப்பு அறிவித்தல் வௌியாகியுள்ளது.