1,000 ரூபா சம்பள உயர்வு வர்த்தமானிக்கு எதிரான மனு நிராகரிப்பு!

1,000 ரூபா சம்பள உயர்வு வர்த்தமானிக்கு எதிரான மனு நிராகரிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறுகோரி, பெருந்தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.



குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரித்து, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி  வெளியிடப்பட்டது.

அந்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறுகோரி 20 பெருந்தோட்ட நிறுவனங்களால் மார்ச் 16ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி தொழில் அமைச்சரின் செயலாளளர் எம்.பீ.டீ.கே. மாபா பத்திரணவின் கையொப்பத்துடன் கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இந்த தீர்மானமானது மார்ச் 5 ஆம் திகதி முதல் செல்லபடியாதல் வேண்டும் என அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் முதலாம் திகதி சம்பள நிர்ணய சபையில் உறுதிப்பத்தப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்தப்பட்ச நாளாந்த சம்பளம 900 ரூபாவாகவும், வரவு-செலவுத் திட்டக் கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் என நாளாந்த சம்பளம் 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா வேதன உயர்வுக்கான வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் 2021 மார்ச் 16ஆம் திகதி மனுதாக்கல் செய்தன. இந்த மனுவின் பிரதிவாதிகளாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தொழில் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட 18 பேர் பெயரிடப்பட்டனர்.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பெருந்தோட்டத்துறை, நெருக்கடி நிலையை சந்திக்கும் என குறித்த மனுவின் ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவித்திருந்ததுடன், பெருந்தோட்ட நிறுவனங்கள் அரசிற்கு பாரியளவு வரியை செலுத்த நேரிடும் எனவும் இதனூடாக நிறுவனங்கள் சிரமத்திற்கு ஆளாகும் எனவும் குறிப்பிட்டிருந்தன.

இந்த நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image