வட்ஸ் அப் பாவனைத் தடை விரைவில் நீக்கப்படலாம் - UAE

வட்ஸ் அப் பாவனைத் தடை விரைவில் நீக்கப்படலாம் - UAE

வட்ஸ்அப் மற்றும் பேஸ்டைம் போன்ற VoIP சேவைகளுக்குள்ள தடையை நீக்குவதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக ஐக்கிய அரபு இராச்சிய இணைய பாதுகாப்புத் தலைவர் முஹம்மட் அல் குவைட்டி தெரிவித்துள்ளார்.

ஜி.சி.சி சைபர்-பாதுகாப்பு மாநாடு மற்றும் ஞாயிற்றுக்கிழமை கண்காட்சியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், சோதனை பயன்பாட்டிற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வட்ஸ்அப் பாவனைக்குள்ள தடை நீக்கப்படவுள்ளது. பரிசீலிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன, அவை செயல்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த விதிமுறைகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஐக்கிய அரபு அமீரகம் விரைவில் வாட்ஸ்அப் அழைப்புகளுக்கான தடையை நீக்கக்கூடும்

மைக்ரோசொப்ட் டீம், Zoom, ஸ்கைப் போன்றவை தற்போது வீட்டில் இருந்து பணியாற்ற மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எனினும் வட்ஸ்அப் மற்றும் பேஸ்டைம் என்பன அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டில் வழங்கப்படும் தொலைதொடர்பு சேவைகளை கட்டணம் செலுத்தி நாட்டு மக்கள் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக இச்சேவைகள் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image