மாலைதீவில் வௌிநாட்டு பணியாளர்கள் தங்குமிடத்தில் தீ - 10 பேர் பலி!

மாலைதீவில் வௌிநாட்டு பணியாளர்கள் தங்குமிடத்தில் தீ - 10 பேர் பலி!

மாலைதீவு தலைநகர் மாலேயில் வெளிநாட்டு பணியாளர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களில் நேற்று (10) இடம்பெற்ற தீ பரவியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 9 பேர் இந்தியர்கள் என்றும்  பாதிக்கப்பட்டவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தரைத்தள வாகன பழுதுபார்க்கும் இடத்திலேயே தீ ஏற்பட்டு பின்னர் பரவியுள்ளது. இந்தநிலையில் தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் ஒன்பது இந்தியர்களும், ஒரு பங்களாதேச நாட்டவரும் அடங்குவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image