இலங்கையில் உழைக்கும் வயதுடையோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையில் உழைக்கும் வயதுடையோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையர்கள் பொருளாதார நல்வாழ்வையும் அடைவதற்கு முன்பே முதுமையடைந்து விடுகின்றனர். ஏனெனில் காலத்துக்கு காலம் மக்கள் கடினமான பொருளாதார நிலைமைகளுடன் போராட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு வருகின்றனர் என்று பொருளாதார தரவு தளமான Charts.lk தெரிவித்துள்ளது.

நாட்டை ஆளும் அரசாங்கங்களின் மோசமான முகாமைத்துவம் காரணமாக மக்கள் வாழ்நாள் முழுவதும் பொருளாதார நெருக்கடிகளுடன் போராடவேண்டியுள்ளது என்று அத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

Charts.lk, பொருளாதார தரவு தளத்தின் படி, 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையின் சனத்தொகையில் 17.9 வீதமானவர்கள் 59 வயதுக்கு மேற்பட்டவர்கள், இது தெற்காசியாவில் அதிக முதியோர் சனத்தொகையைக் கொண்ட நாடாக இலங்கையை உருவாக்கியது. இது 2009/10 இல் இருந்த 12 சதவீதத்திலிருந்து மிக கூர்மையான அதிகரிப்பு ஆகும்.

இதேவேளை,இலங்கையில் இடம்பெற்று வந்த மூன்று தசாப்தகால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவது சாத்தியமான நிலையில், இது மக்கள் மத்தியில் பொருளாதார மலர்ச்சிக்கான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அத்துடன் 1978/79ம் ஆண்டு காலப்பகுதியில் நாடு பொருளாதார மயமாக்கப்பட்டபோது மக்களுக்கு 9 சதவீத சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதியளித்தது.

1963 இல், இலங்கையர்களில் 7 வீதமானவர்கள் மாத்திரமே 59 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தனர், இது இலங்கையை இப்போது ஒப்பிடும்போது மிகவும் இளமையாக இருந்தது என்பதை பிரதிபலிக்கிறது.

2019 ஆம் ஆண்டிற்கான குடும்ப வருமானம் மற்றும் செலவின கணக்கெடுப்பு அறிக்கையை Charts.lk வகைப்படுத்தியது, இது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்டது, ஏனெனில் கணக்கெடுப்பில் வயது அடிப்படையில் நாட்டின் மக்கள்தொகை பரவல் உள்ளது.

ஊழல், திறமையின்மை மற்றும் பொது வளங்களை கொள்ளையடித்தல் ஆகியவற்றிற்கு மத்தியில் கடன் என்பன மார்ச் மாதம் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைய செய்தமையையும் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன் இலங்கையில் உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதுடன் சார்ந்திருப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் நாட்டின் நிலைமையை மென்மேலும் மோசமாக்குகிறது.

அதன் சார்ந்திருப்பவர்கள் வேகமாக அதிகரித்து வருவது விடயங்களை மோசமாக்குகிறது.

உதாரணமாக, 15 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட அதன் உழைக்கும் வயது மக்கள்தொகை, 2009/10 இல் 62 சதவீதத்திலிருந்து 2019க்குள் 59 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்நிலைமை கொவிட் பரவல் காலத்தில் மேலும் மோசமடைந்துள்ளது. நாடு முடக்கப்பட்டமை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஏனைய தடைகள் காரணமாக 2020 மற்றும் 2021ம் காலப்பகுதியில் பணியாற்றும் வயதில் இருந்தவர்கள் தொழிலை விட்டு விலகியதுடன் பலர் ஓய்வு பெற்றுள்ளனர் .

இந்நிலையில், அண்மைக் காலங்களில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையும் உச்சத்தைத் தொட்டுள்ளது. ஏற்கனவே திறன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பொருளாதாரத்திற்கு இதுவொரு மரண அடியாகும். இலங்கையில், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் முச்சக்கர வண்டிகளை ஓட்டுகின்றனர். மேலும் 1.5 மில்லியன் பேர் அரச துறையில் வேலை செய்கின்றனர், இது 40 சதவீதமான தொழிலாளர் சக்தியை உருவாக்குகிறது, அவர்கள் நாட்டில் எதிர்மறையான உற்பத்திக்கு பங்களிக்கின்றனர்.

எனவே, கொள்கை வகுப்பாளர்களும் மக்களும் தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ளாத வரையில், எந்தவொரு பொருளாதார நல்வாழ்வையும் அடைவது சாத்தியமில்லை, ஏனெனில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அவர்களின் முதன்மையான உழைக்கும் வயதில் போதுமான மக்கள் இல்லை.

2012 இல் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் மக்கள்தொகை நிபுணர்கள் இவ்விடயம் தொடர்பில் முன்னறிவித்தல் செய்தபோதிலும் அது அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. ஓய்வு பெறும் வயதை 55லிருந்து 65 ஆக மாற்றியதைத் தவிர வேறெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image