அரச நிவாரண கொடுப்பனவில் புறக்கணிக்கப்பட்ட முறைசாரா பிரிவின் ஊழியர்கள்!
இந்த தினங்களில் அதிகளவில் நாடு முழுவதும் பல நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இதனை ஊடகங்களிலும், யதார்த்ததிலும் நாம் பார்க்க முடியும்,
மேலும் பால்மா மற்றும் எரிவாயு அல்லது வேறு சில பொருட்களுக்கான வரிசைகளிலும் நாம் இதன் அனுபவத்தை பெறலாம். இப்போது நீங்களும் இதனை அனுபவித்திருப்பீர்கள். இந்த வரிசைகளுக்கு என்ன காரணம் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும். நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது என்பதே அதன் சாராம்சமாகும். அந்த நெருக்கடியின் விளைவின் முதற்கட்டம்; இப்படியே வரிசைகள் ஊர்வலம் வரப்போகிறது என்று நாடு முழுவதும் வரிசை கட்டி (நீண்ட வரிசைகள்) நிற்கிறது.
நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில், அரச ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள், விசேட தேவையுடையோர் உள்ளிட்ட பிரிவினருக்கு 229 பில்லியன் ரூபா நிவாரணத் தொகையை அரசாங்கம் வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் கடந்த 4ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இராணுவ வீரர்கள், சமுர்த்தி பெறுபவர்கள், விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இதற்காக பெயரிடப்பட்டிருந்தனர்.
இந்த நிவாரணக் கொடுப்பனவின் கீழ் அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டாலும், அரச ஊழியர்களின் கைகளுக்கு 5,000 ரூபா கிடைக்கும் வரை அது நம்பகத்தன்மையற்ற ஒன்றாகும்.
'தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான விதிகள் வகுக்கப்படுகின்றன,' என தொழில் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்த நிவாரணக் கொடுப்பனவால் முறைசாரா தொழிலாளர்கள் எவ்வாறு பயனடைவார்கள் என்பது குறித்து எந்தவொரு பொறுப்பான நபரும் விளக்கமளிக்கவில்லை என்பது, அதன் பலன்கள் முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கிடைக்காததாலா? என்பது ஒரு கேள்விக்குறிய விடயமாகும். இவ்வாறான நிலையில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நாளாந்த வேதனம் பெரும் ஊழியர்கள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவார்கள் அல்லவா?
இன்று இலங்கை பொருளாதார ரீதியாக மிகவும் இறுக்கமான நிலையில் உள்ளது. இது உலகமே அறிந்த ஓர் யதார்த்தமான உண்மை. இவ்வாறான நிலையில் இந்த நிவாரணக் கொடுப்பனவை வழங்குவதால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பை ஏழு அறிவுடன் உலகத்தை பார்க்கும் நிதியமைச்சர் சிந்திக்காதது வருந்தத்தக்க விடயமாகும்.
கொழும்பு நுகர்வோர் சபையின் விலைச் சுட்டெண் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் மேற்பரப்பு பணவீக்கம், 2021 நவம்பரில் 9.9% ஆக இருந்து டிசம்பரில் 12.1% ஆக உயர்ந்தது. நிதி அமைச்சரின் 229 பில்லியன் ரூபா நிவாரணக் கொடுப்பனவு பொருளாதாரத்தில் இணைக்கப்படுவது பணவீக்கத்தை வெகுவாக அதிகரிப்பதுடன் மக்களின் பைகளிலும் அழுத்தத்தை அதிகரிக்கும்.
இவ்வாறான நிலையில், நாட்டில் உள்ள 8 மில்லியன் உழைக்கும் மக்களில் 1.5 மில்லியன் அரச ஊழியர்களுக்கு மட்டும் இந்த 22 பில்லியன் ரூபாவை பிரித்துக் கொடுக்கும்போது, 6.5 மில்லியன் தனியார் துறையின் முறையான மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் சொற்பமானவையவல்ல. இது முறைசாரா பிரிவில் உள்ள தொழிலாளர்களையும் ஒடுக்குவதாக அமைகிறது.
இந்த நிலை தற்செயலாக ஏற்படுவதில்லை. இது ஒரு விழிப்புணர்வு செயல்முறை. ஏனெனில் இவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடிக்குள் அரசாங்கமும் மக்களும் தள்ளப்பட்டிருக்கும் இவ்வேளையில், அரசாங்கம் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட விரும்பவில்லை. அரசாங்கம் எதிர்நோக்கும் அரசியல் நெருக்கடியில் இருந்து மீள வேண்டும் என்ற சுயநல நோக்கத்துடன் மாத்திரம் செயல்பட்டு வருகிறது என்பது தெளிவாகின்றது. அதற்காக இந்த நாட்டின் பொருளாதாரத்தைப் போலவே உழைக்கும் மக்களையும் பலியாக்க பார்க்கின்றார்கள்.
எனவே, அரசாங்கத்தின் நிவாரணக் கொடுப்பனவினால் ஏற்படும் பொருளாதார விரிவாக்கம் என்பது நாளாந்தம் வேதனம் பெறும் தொழிலாளர்கள் வர்க்கத்தினரிடையே ஏற்படுத்தும் பொருளாதார தாக்கத்தை எண்ணிக்கையில் அளவிட முடியாததுடன், இது அவர்களின் குடும்பப் பொருளாதாரத்தின் முழுமையான சரிவாகவும் அமைகின்றது. எனவே, இது அரசாங்கத்தின் பிழைப்புக்காக நாளாந்தம் வேதனம் பெற்று வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் தியாகமேயன்றி வேறில்லை என்பது தெளிவாகிறது.