சர்வதேச வீட்டுப்பணியாளர்கள் தினம் 2021

சர்வதேச வீட்டுப்பணியாளர்கள் தினம் 2021


வீட்டுப் பணியாளர்களையும் உரிமைகளுடன் கூடிய ஊழியர்களாக ஆக்குவோம்

ஆண்டுதோறும், ஜுன் 16ம் திகதியில் சர்வதேச வீட்டுப் பணியாளர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. இம்முறை அத்தினத்திற்கான தலைப்பாக 'கொவிட் 19 தொற்றைத் தாண்டி நன்னெறியுடனான தொழில் என்பதனை யதார்த்தமாக ஆக்கிக் கொள்வோம்" என்பதாகும்.

சர்வதேச ரீதியாகவும் இலங்கையினுள்ளும் கொவிட் தொற்று காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டது முறைசாரா பிரிவின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களாவர். அவர்களிடையே வீட்டுப்பணியாளர்கள் முக்கியமானவர்களாகும்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் 2021 ஜனவரி மாதம் வரையில் கொவிட் 19 தொற்றின் இரண்டாம் அலை காணப்பட்ட காலப்பகுதியில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் கொழும்பு காரியாலயத்துடன் இணைந்து ' Rapid Assessment of the Impact of Covid – 19 on Domestic Workers in Sri Lanka" வேலைத்திட்டத்தில் பங்கெடுக்கவும் செயற்றிறன் மிக்க வேலையினை செய்யவும் எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.  அதனூடாக இந்நாட்டின் வீட்டுப்பணிப் பெண்கள் கொவிட் தொற்று நோய் நிலைமையினுள் முகங்கொடுத்த நிலைமை குறித்து எம்மால் சிறந்த புரிந்துணர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.. இந்த வேலைத்திட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இருந்த அடிப்படை விடயங்களில் ஒரு சில, வருமாறு...


01. இலங்கையின் வீட்டுப்பணிப்பெண்களில் 98 வீதமானோருக்கு எழுத்துமூலமான சேவை நிபந்தனைகளுடனான நியமனக் கடிதம் இல்லை.
02. வீட்டுப்பணிப்பெண்களில் 70 வீதமானோருக்கு சமூகப் பாதுகாப்பில்லை. சமூகப் பாதுகாப்பு இருக்கின்றது என்று கூறுகின்ற பெரும்பாலானோர் அவ்வாறு கூறியிருப்பது சமுர்த்தி போன்ற வேலைத்திட்டங்கள் காரணமாகவேயன்றி வீட்டுப்பணிப்பெண்களை இலக்காகக் கொண்ட வேலைத்திட்டங்கள் அல்ல.
03. தொற்று நோய் காலப்பகுதியில் வீட்டுப் பணிப்பெண்களில் 70 வீதமானோருக்கு தொழில்கள் இல்லாமற் போயுள்ளதுடன் அவர்களது வருமானம் முடங்கிப் போயுள்ளது.
04. வீட்டுப் பணிப்பெண்களில் 94  வீதமானோருக்கு அவர்களது வருமானமே அவர்களின் குடும்பத்தின் பிரதான வருமான வழியாக இருந்தது.
05. அவர்களது மாதாந்த வருமானம் 16,000 ரூபாய் அளவில் இருந்தது.
06. ,ப்பணிப்பெண்களில் 85 வீதமானோர் ஒரு தொழில் தருநரிடம் மாத்திரம் சேவையாற்றுகின்றனர்.
07. அரசாங்கத்தினால் கொவிட் 19 தொற்று காலப்பகுதியில் வழங்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்கள் 54 வீதமானவர்களுக்கே கிடைத்திருந்தது.
08. வீட்டுப் பணிப்பெண்களில் 70 வீதமானோருக்கு திரும்பவும் தொழில் கிடைக்குமாயின் தொற்று நோய் காலப்பகுதியிலாவது தொழிலுக்கு போவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன் 50வீதமானவர்கள் குறிப்பிட்டது யாதெனில் நோய்த் தொற்று ஏற்பட்டாலும் தொழிலுக்குப் போவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட விடயங்களை கவனத்திற் கொள்ளும் போது விளங்குவது யாதெனில் இந்த வீட்டுப்பணிப்பெண்களில் சேவை நிபந்தனைகள் மற்றும் சேவை நிலைமைகள் தொடர்பில் எமது நாட்டில் முறையான சட்டம் ஒன்று இல்லாமையினால் மிகவும் நிர்க்கதியான நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர் என்று விளங்குகின்றது. தொழில் இன்மையினால் அவர்களது வாழ்க்கை மிகவும் கவலைக்கிடமான நிலைமைக்குள்ளாகியுள்ளது. எந்தவொரு சமூகப் பாதுகாப்பிற்கும் உரிமையின்மையினால் அவர்களது இருப்பும் எதிர்காலமும் தொடர்பில் நிச்சயமற்ற நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இது கொவிட் தொற்றின் முதலாவது, இரண்டாம் அலைகளின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்களாகும்.

மேற்குறிப்பிடப்பட்ட ““Rapid Assessment of the Impact of Covid – 19 on Domestic Workers in Sri Lanka”வேலைத்திட்டத்துடன் அந்த கணக்கெடுப்பிற்கு தெரிவு செய்யப்பட்ட வீட்டுப் பணிப்பெண்களுக்கு உலர் உணவுப் பொதியொன்று, முகக் கவசங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பொருட்களைப் பெற்றுக் கொடுக்க முடிந்தமை அச்சமயத்தில் அவர்கள் பெற்றுக் கொள்ளப்பட்ட சிறு ஆறுதலாகும் என்றும் குறிப்பிடப்பட வேண்டும்.
தற்போது நாம் கடப்பது கொவிட் தொற்றின் மூன்றாவது அலையாகும். இது முதலாவது மற்றும் இரண்டாம் அலைகளை விடவும் பாரதூரமானதாக உள்ளதுடன் எமது அங்கத்தவர்கள் முகங்கொடுத்துள்ள கஷ்டமான நிலையானது, இந்த ஆய்வில் வெளிப்பட்ட நிலைமையினை விடவும் பெரும்பாலும் மாறுபட்டுள்ளதுடன் மோசமானதாகவுள்ளது. இந்த மாதம் 16ம் திகதி அவர்கள் உலக வீட்டுப் பணியாளர்கள் தினத்தைக் கொண்டாட வேண்டியிருப்பது தொழில் அற்றுப் போயுள்ள ஊழியர்கள் பிரிவினர் என்ற விதத்திலாகும்.
இம்முறை சர்வதேச வீட்டுப் பணியாளர்கள் தினத்திற்கு இணையாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வீட்டுப் பணியாளர்களுக்கான உரிமைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள C189 பட்டயம் வெளியிடப்பட்டு 10 வருடப் பூர்த்தி bடம்பெற்றிருப்பதும் விசேடம்சமாகும். ஆனாலும் இலங்கையினால் இது வரையில் ஐடுழு - ஊ189 அங்கீகரிக்கப்படாமையினால் எமது பணியாளர்களுக்கு அதன் மூலம் பெற்றுக் கொள்ளப்படக்கூடியதாகவிருந்த பலன்கள் ,து வரையில் கிடைக்கவில்லை. அதனால் அடுத்த வருடத்தினுள் ,லங்கையினுள்ளே ILO - C189 அங்கீகரித்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சவால் வீட்டுப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொழிற்சங்கம் என்ற முறையில் எம்மெதிரே உள்ளது. அது எதிர்வரும் காலத்தில் எம்மெதிரே இருக்கின்ற சவாலாகும்.

• சர்வதேச வீட்டுப் பணியாளர் தினம் வெல்க !!
•இ,லங்கையினுள்ளே ILO - C189 அங்கீகரிக்கப்படுவதற்கான வேலைத்திட்டம் வெல்க !!

கல்ப மதுரங்க
செயலாளர்

 

குறிப்பு

"'Protect என்பது முறையான தொழிலாளர்களிடையேயும் முறையற்ற தொழிலாளர்களிடையேயும் அவர்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் அவர்களது சேவை நிலைமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமையினை மேம்படுத்துவதற்காக தலையீட்டை மேற்கொள்கின்ற செயற்பாடுகளைச் செய்கின்ற அமைப்பாகும். முறையற்ற பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் தொடர்பில் எமது பிரதான நோக்கமாவது அவர்களுக்கு சிறந்த சேவை நிபந்தனைகளை உறுதிப்படுத்தல், அந்த ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு பலன்களைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் அவர்களுக்கு நலன்புரி முறையொன்றைப் பெற்றுக் கொடுத்தலாகும். மேற்குறிப்பிட்ட நோக்கங்களை வெற்றிகரமாக்கிக் கொள்ளும் மிக முக்கிய நடவடிக்கையாக ,லங்கையினுள் ஐடுழு - ஊ189 மற்றும் ஐடுழு ஊ190 செயற்படுத்துவதற்குப் பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் அரச நிறுவனங்களை ,லக்கு வைத்து பரப்புரை வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image