தொழிலாளர் நன்மைக்காய் ஒன்றிணைவோம்!

தொழிலாளர் நன்மைக்காய் ஒன்றிணைவோம்!

கொவிட் 19 தொற்று தொழில்வாய்ப்புகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்கு எதிராக செயற்பட அரசாங்கத்தை முன்வருமாறு சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மற்றும் மேன்பவர் ஊழியர்கள் சார்பில் பணியாற்றும் தொழிற்சங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

சுமார் 13 தொழிற்சங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து சுகாதார அமைச்சு, தொழில் அமைச்சு, கொரோனாவிற்கு எதிராக செயற்படும் ஜனாதிபதி செயலணி, முதலீட்டு ஊக்குவிப்புச்சபை என்பவற்றுக்கு குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வை எடுப்பது தொடர்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த இவ்வழைப்பு விடுக்கப்படவுள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் வருமாறு.

கட்டாய சுய தனிமைப்படுத்தலில் உள்ள தொழிலாளர்களுக்கு அவசர நிவாரண பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்குதல். இன்றுவரை பல்தேசிய நிறுவனங்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வேத தொண்டு நிறுவனங்களிடம் இருந்து இதுவரை கிடைக்கப்பெற்ற கொவிட் நிதியுதவிப் பட்டியலை சர்வதேச ஐ.எஃப்.ஐ.களிடமிருந்து பெறப்பட்ட சில கோவிட் நிதிப் பட்டியலைக் https://docs.google.com/spreadsheets/d/1ey0XU7JmEZLxd7enZhcxD0ZWgDNENfhVC63COVEDO-k/edit?usp=sharing. இல் பிரவேசித்துக் காணலாம்.
பாதிக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கு உதவி வழங்க மேற்கூறப்பட்ட நிதிகளில் சிலவற்றை அரசாங்கம் பயன்படுத்துவதாக நாம் நம்புகிறோம். இந்த நிதியை இதுவரை எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதற்கான தௌிவாக வழங்கவேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கிறோம்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பணியாற்றும் அனைத்து மேன்பவர் தொழிலாளர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வது

அரசினால் வழங்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சை என்பன சர்வதேச பாதுகாப்புத் தரத்திற்கேற்ப இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

தங்குமிடங்களில் அல்லது தொழிற்சாலைகளில் கொவிட் 19 தொற்று அறிகுறிகள் காணப்பட்டால் அல்லது உறுதி செய்யப்பட்டால் அறிவிப்பது, எவ்வாறு செயற்படுவது போன்ற விபரங்கள் மற்றும் அரசாங்கம். அவசர தொடர்பு இலக்கங்கள் என்பவற்றை வழங்கி தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல். தமிழ், சிங்கள மொழிகளில் தொடர்பாடல் வசதிகளை வழங்குவதை உறுதிப்படுத்தல்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள, கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட/ முடக்கப்பட்ட நிலையில் தொழிலுக்கு செல்ல முடியாது போன தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குதல்.

கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட முடக்கல் நிலையில் போதான இழப்பீடு குறித்த முத்தரப்பு ஒப்பந்தத்தை வௌியிட்டு அதனை நடைமுறைப்படுத்துங்கள்.

தொழிற்சாலைகள் மீள திறக்கப்படும் மற்றும் தொழிலாளர்கள் மீள சமூகமளிக்குமாறு அழைக்கப்படும் போது அரசாங்க சுகாதார அதிகாரிகளினூடாக கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை செயல்படுத்துதல்.

கொவிட் 19 இரண்டாம் அலையின் காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பாரிய கொத்தணி மினுவங்கொட ப்ரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் ஆரம்பமானது. தற்போது கட்டுநாயக்க உட்பட ஏனைய சுதந்திர வர்த்தக வலயங்களிலும் படிப்படியாக பரவியுள்ளது.

இது தவிர தற்போது இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தவிர ஏனையவர்கள் தத்தமது தங்குமிடங்களில் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு கூறப்பட்டுள்ளனர்.

அந்த தொழிலாளர்கள் தங்குமிடத்திலிருந்து வெளியேறினால், மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், இந்த தொழிலாளர்களுக்கு முறையான முன் எச்சரிக்கை வழங்கப்படாததால், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை அத்தியாவசியங்களை அவர்களால் முதலிலேயே வாங்கி வைத்துக்கொள்ள முடியாமல் போனமையினால் தற்போது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

கட்டான பிரதேச செயலகப்பிரிவின், எவரிவத்த, ஜயவர்தனபுர, அமந்தொழுவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் கம்பஹா மாவட்டத்தின் வலன மற்றும் கோவின்ன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்துக்குள் அமைந்துள்ள பல தொழிற்சாலை ஊழியர்களுக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த தொழிற்சாலைகளின் ஊழியர்கள் வேலைக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது, அந்தந்த விடுதிகளை விட்டு வெளியேற அவர்கள் மீது பயண தடைகள் விதிக்கப்பட்டன. இந்த தொழிலாளர்களுக்கு பொறுப்பேற்க எந்தவொரு நிறுவனமும் முன்வரவில்லை, அவர்களின் நலன் குறித்து ஆராயவும் யாரும் முன்வரவில்லை. தொழிலுக்கு சமூகமளிக்க முடியாமல் போனது அவரவர் தவறுகளாகவே தொழில் வழங்குநர்கள் பார்க்கின்றனர். வைரஸ் விரைவாக பரவியுள்ள சில தொழிற்சாலைகள் தங்கள் ஊழியர்களுக்கு சில நிவாரணப் பொருட்களை மட்டுமே வழங்கியுள்ளன, அதே நேரத்தில் மற்ற ஊழியர்கள் கைவிடப்பட்ட நிலையில் உண்ண உணவின்றி கஷ்படுகின்றனர்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை அண்மித்த பகுதியில் தொழிற்சங்கங்கள் அறிந்தளவில் சுமார் 300 தொடக்கம் 400 வரையான மேன்பவர் ஊழியர்கள் மற்றும் அன்றாட கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அவரவர் தங்குமிடங்களில் கட்டாய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என அத்தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

இதில், இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம், இலங்கை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை தொழிற்றுறை ஊழியர்கள் சங்கம், இலங்கை வணிக, தொழில்துறை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், தாபிந்து கூட்டமைப்பு- கட்டுநாயக்க, Liberation Movement, National Union of Seafarers in Sri Lanka (NUSS), Progressive Women’s Collective; Revolutionary Existence for human Development (RED) – Katunayake, Sramabimani Kendraya – Seeduwa, Standup Movement Lanka – Katunayake, and United Federation of Labour (UFL) ஆகியன அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் தங்குமிடத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உடன் தங்கியிருந்தவர்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் நாடு முழுவதும் (களுத்துறை, தம்பதெனிய, பேராதெனிய உட்பட பல இடங்களுக்கு ) இராணுவத்தினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். அவைகளில் பெரும்பாலானவை துப்புறவின்றியும் அடிப்படை கொவிட் 19 பாதுகாப்பு தரங்கள் அற்றவையாகவும் காணப்படுகின்றன. இந்த முகாம்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மாலபே நெவில் பெர்ணாண்டோ வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

தற்போது தொற்றுக்குள்ளானவர்கள் மட்டுமே சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். அருகில் இருந்தவர்கள், நெருங்கிப் பழகியவர்கள் வீடுகளில், தங்குமிடங்களிலேயே சுயதனிமைக்குட்படுத்தப்படுவதுடன் அதிகாரிகள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டவர்கள் என்று ஸ்டிக்கரை ஒட்டி விடுகின்றனர்.

இத்தொழிலாளர்களுக்கு அடிப்படை தேவைகளை கூட வழங்காமல் நான்கு சுவற்றுக்குள், கதவின் பின்னால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மேன்பவர் தொழிலாளர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஏனெனி்ல் அவர்களை பொறுப்பெடுக்க எந்த நிறுவனமும் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

Daily FT

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image