இளம் வயதினரை தாக்கும் புதிய கொவிட் 19 திரிபு

இளம் வயதினரை தாக்கும் புதிய கொவிட் 19 திரிபு

இலங்கையில் வேகமாக பரவி வரும் திரிபடைந்த கொவிட் 19 வைரஸினால் குழந்தைகள் விரைவில் பாதிக்கப்படுவதனால் பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பது பாதுகாப்பானது அல்ல என்று முன்னணி கொவிட் 19 ஆராய்ச்சியாளரும் ஶ்ரீஜயவர்தன பல்கலைக்கழக நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று அறிவியல்துறைத் தலைவருமான பேராசிரியர் நீலிக்கா மாலவிகே வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலைகளை மீள திறப்பதற்கான பிற்போடப்பட்டமைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பேராசிரியர் மாணவர்களுக்கு தொற்று ஏற்படுவதை தடுப்பதனூடாக கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஆரம்ப கொவிட் 19 வைரஸான SARS-COV2 விடவும் திரிபடைந்த வைரஸினால் சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். பாடசாலைகள் மூட மேற்கொண்ட தீர்மானம் மிகவும் சிறந்தது. இது தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதுடன் பரவும் அபாயத்தையும் குறைக்கிறது. முந்தைய திரிபடைந்த வைரஸை விடவும் தற்போதையது வீரியம் மிக்கதாக காணப்படுகிறது. வயது குறைந்தவர்களையும் தாக்கக்கூடியதாக இந்த வைரஸ் காணப்படுகிறது.

மாணவர்கள் பல மாதங்களாக பாடசாலை கல்வியை இழந்திருப்பது நியாயமற்றதுதான். ஒரு சிலர் மற்றுமே ஒன்லைன் கற்றலுக்கான வாய்ப்பினை பெறுகின்றனர். எனினும் தற்போது கல்வியை விடவும் உயிர் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதே முக்கியமானது.

இலங்கை மட்டுமல்ல உலக நாடுகளில் உள்ள மொத்த சனத்தொகையில் சனத்தொகையில் அதிக எண்ணிக்கையானோருக்கு நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் பரவிவரும் வைரஸ் குறித்த விரிவாக ஆய்வுகளை மேற்கொண்ட பேராசியரி மாலவிகே, திரிபடைந்த கொவிட் 19 வைரஸானது காற்றில் பரவக்கூடியது என்றும் மக்கள் கூடுதல் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆங்கில மொழி நாளிதழான டெய்லி மிரருக்கு வழங்கிய செவ்வியில் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டிய நாட்டுக்குள் வேறு திரிபுகளை நுழைய விடாது தடுப்பது மிக முக்கியம் என்றும் இது சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்திருந்தார்.

அவரது செவ்வியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன.

கேள்வி - நாட்டில் வேகமாக பரவி வரும் திரிபடைந்த கொவிட் 19 வைரஸ் குறித்த மேலதிக விபரங்களை தெரிவிக்க முடியுமா? ஆரம்பத்தில் பரவிய ரைவஸிற்கும் தற்போதைய வைரஸிற்கும் இடையிலான பாரிய வேறுபாடுகள் யாவை?

தற்போது இலங்கையில் B.1.1.7 என்றழைக்கப்படும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட திரிபடைந்த வைரஸ் அடையாளங்காணப்பட்டுள்ளது. உலக சுகாதார தாபனம் SARS-COV2 பெயரிட்டுள்ள 3 வகை திரிபடைந்த வைரஸ்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. இவை மிக வேகமான பரவும் தன்மையைக் கொண்டவை, ஆபத்தானவை ( variants of concern (VOCS)) என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவை வேகமான பரவி ஆபத்தை ஏற்படுத்துவது மாத்திரமன்றி ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்றை ஏற்படுத்தக்கூடியனவாகவும் தடுப்பூசிக்கு தப்பி தொற்றை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. B.1.1.7 என்று பெயரிடப்பட்டுள்ள திரிபடைந்த வைரஸானது ஏனைய வைரஸ்களை விடவும் 50 வீதம் வேகமாக தொற்றக்கூடியதாக உள்ளது. எனவே இதற்கு ( variants of concern (VOC) என்று அழைக்கப்படுகிறது.

பிரச்சினை என்னவென்றால் எந்தவொரு நாட்டுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவே நோயாளிகளை தங்க வைப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் வசதிகள் உள்ளன. அவ்வசதிகள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது. தொடர்ச்சியாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமாயின் அதனை சமாளிப்பது மிகவும் கஷ்டமான விடயம். விநியோகமும் கேள்வியும் சமானாக இல்லாவிடின் அது பாரிய பிரச்சினையாகும். நோயாளர்களை காப்பாற்ற முடியாது. இந்தியாவில் அதுதான் தற்போது நடக்கிறது.

முந்தைய வைரஸ் போன்றல்லாது புதிய திரிபடைந்த வைரஸானது இளம் வயதினரையும் தாக்குவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எந்த வயதினரை இந்த வைரஸ் எளிதாக தாக்குகிறது என்பதை தௌிவுபடுத்த முடியுமா? இதிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோர் என்ன செய்யவேண்டும்?

புதிய திரிபடைந்த வைரஸானது இளம் வயதினரை தாக்குகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப SARS-COV2 வைரஸை விடவும் இந்த வைரஸ் எளிதாக சிறுவர்களை தாக்குகிறது. பாடசாலைகளை மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமானது மிகவும் சிறந்தது. இது பிள்ளைகளை தொற்றிலிருந்து காப்பாறுவது மட்டுமல்ல வைரஸ் பரவுவதையும் தடுக்கிறது.

கேள்வி - இத்தகைய சூழ்நிலையில் நாம் பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிப்பது மற்றும் பிள்ளைகள் சார்ந்த ஏனைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இல்லையில்லை இப்போது அது சிறந்த முடிவல்ல. அது மாணவர்களுக்கு ஏற்படும் அநீதியாகும். வீடுகளில் இருந்ததனால் மாணவர்கள் பல மாத கல்வியை இழந்தனர். சிறு பகுதியனரே ஒன்லைன் மூலமான கற்றலை பெறக்கூடியதாக உள்ளது என்று நாம் அறிவோம். இது இலங்கையில் உள்ள பாரிய பிரச்சினையாகும். எனினும் இன்றைய சூழ்நிலையில் உயிரை பாதுகாப்பது தான் மிக முக்கியம்.

தற்போது எந்தவொரு தடுப்பூசித் திட்டமுமில்லை. அல்லது மீண்டும் தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கும் வரை கொவிட் 19 தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மக்கள் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்?

வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்களும் தடுப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பது மிக அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

தனியார் நிறுவனங்கள் முடிந்தவரை தொலைதூரத்தில் பணிகளைத் தொடர திட்டங்களை வகுக்க வேண்டும் நேரடியாக நடத்தப்படும் கூட்டங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். தற்போது ஒன்லைன் கூட்டங்களை இலகுவாக நடத்த முடியும். ஒன்றுகூடல்கள் உட்பட அனைத்தையும் உடனடியாக நிறுத்துவது சிறந்தது.

கேள்வி- ஆரம்பத்தில் பரவிய வைரஸ் 10 நாட்களின் பின்னர் தொற்றாது என்று தெரிவித்திருந்தீர்கள். புதிய திரிபடைந்த வைரஸ் எவ்வாறானது?

தொற்று ஏற்படும் காலத்தில் மாற்றங்கள் இல்லை.

கேள்வி - உங்கள் கருத்துப்படி, கொவிட் -19 இலிருந்து நாங்கள் முற்றிலும் விடுபட எவ்வளவு காலம் ஆகும்? கொவிட் 19 தொற்றுநோயுடன் நாம் எவ்வளவு காலம் வாழ வேண்டும்?

உலக மக்கள்தொகையில் பெரும் பகுதியினருக்கு நோய் தடுப்புக்கான வழமுறைகளை செய்ய வேண்டும். இலங்கை மட்டுமல்ல உலக நாடுகளில் உள்ள பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு எதிர்ப்புசக்தியை ஏற்படுத்துவதனூடாக தொற்று பரவுவதை நிறுத்த முடியும். அதற்கு நீண்ட காலம் எடுக்கும். எமக்கு ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம். ஆனால் மென்மேலும் திரிபுகளை நாட்டுக்குள் . மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கும், பரவுவதை நிறுத்துவதற்கும் இலங்கை மட்டுமல்ல முழு உலகமும். எனவே, இது நீண்ட நேரம் எடுக்கும், அத்தகைய நேரம் வரை, நமக்கு ஏற்ற தாழ்வுகள் இருக்கும். ஆனால் இந்த நாட்டிற்கு மேலும் எந்த வகைகளையும் நாங்கள் இறக்குமதி செய்யாதிருக்க வேண்டும். அவ்வாறு பல திரிபுகள் நாட்டுக்குள் நுழையுமாயின் சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரம் என்பவற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

கேள்வி - இத்தகைய ஒரு சூழலில் மக்களுக்கு என்ன செல்ல விரும்புகிறீர்கள்?

தயவுசெய்து வீடுகளில் இருங்கள். தேவையில்லாமல் வௌியில் செல்லாதீர்கள். தேவைகள் இருப்பின் அவசியமானவர் மட்டும் வௌியில் செல்லுங்கள். மற்றவர்கள் வீட்டில் இருங்கள்.

சுசித பெர்ணாண்டோ டெயிலி மிரர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image