நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் ஆண் ஊழியர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
தகமையுடைய இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட இளம் ஆண் ஊழியர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஊழியரின் முறைப்பாட்டுக்கமைய திணைக்கள ரீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நந்தன கலபொட வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைப்பாடு செய்தவர் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் ஏற்கனவே மாவட்டத்திற்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அரச நிர்வாக அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
மாவட்டச் செயலாளர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு தனது ஒத்துழைப்பை வழங்குவதாக மீண்டும் வலியுறுத்தியதோடு, மாவட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தம்மீது முன்வைத்த பொய்யான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
டெய்லி மிரர்