பெண்களுக்கு எதிரான அடக்குமுறை: இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

பாராளுமன்றத்தில் பெண்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கருத்து தெரிவித்தமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது..

பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும்கூட இன்று பிரதேச சபை மட்டத்தில் இருந்து பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும், அடக்குமுறைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் திருமதி செல்வதுரை புவனேஸ்வரி டென்சில் தெரிவித்துள்ளார்.

 
அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராய்ச்சி பெண்களுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இங்கு கருத்து தெரிவித்திருந்தார்.
 
அதன் காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது.
 
இந்த இணைப்பிலும் காணொளியை பார்க்கலாம் 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image