புலம்பெயர்ந்தோரின் வாக்குரிமையை பாதுகாப்பற்காக VoM - PAFFREL அமைப்புகளுக்கு இடையே கலந்துரையாடல்

புலம்பெயர்ந்தோரின் வாக்குரிமையை பாதுகாப்பற்காக VoM - PAFFREL அமைப்புகளுக்கு இடையே கலந்துரையாடல்

புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகம் வாக்களிக்கும் உரிமைக்கான அணுகலை உறுதிசெய்ய எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் சவால்கள் குறித்து , புலம்பெயர்வாளர்களின் குரல் (Voice of Migrant-VoM) வலையமைப்பு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ரோஹன ஹெட்டியாராச்சியுடன் ஜூன் (16) அன்று PAFFREL அலுவலகத்தில் கலந்துரையாடலை நடத்தியது.

மூன்று (03) மில்லியனுக்கும் அதிகமான இலங்கைப் பிரஜைகளாக உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தாம் விரும்பும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு வாக்களிக்கும் முறைமையைத் தயாரிப்பது முன்னுரிமை நடவடிக்கை என்றும், அதற்கு PAFRAL அமைப்பின் ஆதரவும் தலையீடும் தாமதமின்றி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில், 'புலம்பெயர்ந்தோரின் குரல்' (VOM) ஐ பிரதிநிதித்துவப்படுத்தி அதன் நிர்வாக சபை உறுப்பினர் கல்ப மதுரங்க, ஊடக குழு உறுப்பினர் சுஜீவ செனரத், பிரசாதி நிரோஷிகா மற்றும் இணைப்பாளர் பிரியான் விஜேபண்டார மற்றும் செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரியங்க மற்றும்  PAFFREL அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுஜீவ கயனத் மஞ்சுள ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image