உக்ரேனில் தற்போது வசிக்கும் 27 இலங்கையர்கள் தொடர்ந்தும் அங்கிருக்கப்போவதாக அறிவித்துள்ளனர் என்று வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் திருமணம் போன்ற காரணத்தினால் தொடர்ந்தும் அந்நாட்டில் இருக்கப்போவதாக அவ்விலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரேனில் 89 இலங்கையர்கள் தங்கியிருந்தனர். அவர்களில் 15 பேர் மாணவர்கள், மிகுதி 74 பேரில் 39 பேர் இலங்கை திரும்பியுள்ளனர். அன்காராவில் உள்ள இலங்கை தூதரகம் ஜெர்மனி, போலாந்து, ருமேனியா மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகளுக்கான வீசா தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் அமைச்சர் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
நேற்றையதினம் 27 இலங்கையர்கள் மாத்திரமே உக்ரேனில் இருந்தனர். அவர்களுடன் துருக்கி தூதரகம் தொலைபேசி உரையாடலை மேற்கொண்ட போது திருமணம் மற்றும் தொழில் போன்ற தனிப்பட்ட காரணங்களினால் நாட்டை விட்டு வௌியேற விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.
உக்ரேன் மீதான தாக்குதலை கடந்த பெப்ரவரி மாதம் 24 ம்திகதி ரஷ்யா மேற்கொண்டது. இதன்போது 400,000 பொது மக்கள் அருகாமையிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். உக்ரேனுக்கு அண்மித்த நாடான பெலாரஸ் ரஷ்யாவுக்கு ஆதரவு வழங்குவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பெலாரஸ் நாட்டில் 1,561 இலங்கையர்கள் வசிக்கின்றனர். அவர்களுடனான தொடர்பை மொஸ்க்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் தொடர்புகளை பேணுகிறது. அவர் தூதரகம் 24 மணி நேர ஹொட்லைன் சேவையை ஏற்பாடு செய்துள்ளது, ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு விசா நடைமுறையை எளிதாக்கவும் தயாராக உள்ளது. மேலும், பெலாரஸில் உள்ள பல்கலைக்கழகங்கள் அங்குள்ள மாணவர்களுக்கு ஒரு மாத கல்வி இலவச விடுமுறை அளிக்க ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.
உக்ரைன் ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது, அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சரணடைய மறுத்துள்ள நிலையில் அமெரிக்கா ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து ரஷ்யா மீது ஏற்கனவே பொருளாதார தடையை விதித்துள்ளது. மேலும் நிதி நிறுவனங்களின் உயர் பாதுகாப்பு வலையமைப்பான SWIFT இலிருந்து ரஷ்யாவை வெளியேற்றியுள்ளது. பெலாரஸ் எல்லையில் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்குமான பேச்சுவார்த்தை கடந்த 28ம் திகதி அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.