10 மாதங்களின் பின்னர் மீள திறக்கப்படும் விமான நிலையங்கள்

10 மாதங்களின் பின்னர் மீள திறக்கப்படும் விமான நிலையங்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் கடந்த, 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்படவுள்ளன.

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி சுற்றுலாத்துறை சார்ந்தவர்களை நாட்டிற்கு அனுமதிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் ஆம் திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டது.

எனினும், முதற்கட்டமாக அண்மைய சில நாட்களாக உக்ரைனில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts