குவைத்திலிருந்து 26 இலங்கைப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

குவைத்திலிருந்து 26 இலங்கைப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்
குவைத்தில் பணிப்பெண்களாக பணியாற்றிய 26 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.


விசா காலாவதியான நிலையில் தங்கியிருந்த குறித்த இலங்கை பணியாளர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குவைத்தில் இதுபோன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் உள்ளதாகவும், அவர்கள் குழுக்களாக நாட்டுக்கு அழைத்து வரப்படுவதாகவும் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த வீட்டுப் பணிப்பெண்கள் மீதான வழக்குகள் மீளப்பெறப்பட்டு அபராதம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image