கட்டுநாயக்கவில் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமை டிஜிட்டல் மயமானது

கட்டுநாயக்கவில் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமை டிஜிட்டல் மயமானது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமையானது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு புதிய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, விமான நிலையத்தில் பிரதான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் ரேடார் செயற்பாட்டு மையம் ஆகியவை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளன.

1.2 பில்லியன் ரூபா செலவில் இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம், இந்த அதிநவீன அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.  

இந்த டிஜிட்டல் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமை நேற்று(22) துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image