புலம்பெயர் பணியாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ருமேனியாவில் பணிபுரியும் இந்நாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பான விரிவான அறிக்கையைத் தயாரிப்பது, ருமேனியாவில் தூதரகப் பிரிவை நிறுவுவதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரத்தை அனுப்புவது, ஆள் கடத்தலை எதிர்த்து மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வழங்குவது என்ற போர்வையில் இடம்பெறும் மனிதக்கடத்தலை தடுத்து நிறுத்தல், பாதுகாப்பான இல்லங்களை மூடுவது, மற்றும் ஜப்பானில் செயல்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர்கள், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் உள்ள பல பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகள், பரிந்துரை மற்றும் தொழிலாளர் பிரிவை நிறுவுதல் உட்பட கலந்துரையாடப்பட்டன.