உரிமம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுடன் தொழில் அமைச்சர் சந்திப்பு

உரிமம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுடன் தொழில் அமைச்சர் சந்திப்பு

அனுமதிப்பத்திரம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர்களுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (23) கலந்துரையாடியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில், வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளுக்காக, தொழிலாளர்களை அனுப்புவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக தொழிலாளர்களை அனுப்புவதில், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர்களுக்கு, தற்போதை ஒழுக்கவிதிக் கோவையை, புதுப்பிப்பது தொடர்பில், அதன் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், அந்த ஒழுக்கவிதிக் கோவை பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அறியப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய அனுமதிப்பத்pரங்களை புதுப்பிக்கும்போது, முகவர் நிலைய உரிமையாளர் சங்கத்தின் பரிந்துரையைப் பெற்றுக்கொள்வதை அவசியமாக்கும் என்ற ஒழுங்குவிதியை முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இந்தக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image