குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரியை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிப்பு

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரியை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிப்பு

ஓமானில் பெண்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர் ஈ.குஷான் என்பவரை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபரை நாட்டிற்கு அனுப்பும் திகதி தொடர்பில் ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தினால் இதுவரை அறிவிக்கப்படவில்லை என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

குறித்த நபரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்துமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பொலிஸார் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.

மூலம் - நியூஸ்ஃபெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image