எல்லைகளை மீண்டும் திறக்க நியுசிலாந்து தீர்மானம்

எல்லைகளை மீண்டும் திறக்க நியுசிலாந்து தீர்மானம்

கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக எல்லைகளை பூட்டியிருந்த நியுசிலாந்து சர்வதேச பயணிகளுக்காக மீண்டும் எல்லைகளை திறப்பது தொடர்பில் ஆலோசித்து வருகிறது.

கொவிட் தொற்று காரணமாக கடந்த இரு வருடங்களாக நியுசிலாந்தின் எல்லைகளை மூடப்பட்டிருந்தன.

ஏற்கனவே இருவருடங்களுக்கும் மேலாக எல்லைகளை பூட்டியிருந்த அவுஸ்திரேலியா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13ம் திகதி சர்வதேச பயணிகளுக்காக மீண்டும் எல்லைகளை திறக்க தீர்மானித்துள்ளது. அதற்கமைய சர்வதேச பயணிகள் நாட்டுக்குள் நுழைய தனிமைப்படுத்தல் அவசியமில்லை. இந்நிலையில் நியுசிலாந்தும் எல்லைகளை திறப்பது தொடர்பான ஆலோசனைகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

வீசா விலக்கு வழங்கபபட்டுள்ள பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உட்பட 60 நாடுகளைச் சேர்ந்த முழுமையான தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட பயணிகள் எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி தொடக்கம் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கள் நுழையும் அனைவரும் எதிர்மறையான கொவிட் தொற்று பரிசோதனை முடிவுகளை கொண்டிருப்பது கட்டாயம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொற்று பரவலையடுத்து கடந்த 2020 மார்ச் மாதம் நியுசிலாந்து அதன் எல்லைகளை பூட்டியது. அவுஸ்திரேலியாவுடனான ஒரு குறுகிய கால பயணக் குமிழியைத் தவிர, ஏனைய அனைத்தும் பூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image