தொற்றுக்குள்ளானவர்களுக்கான சுயதனிமைப்படுத்தல் முறையை நீக்கவுள்ள பிரித்தானியா
கொவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த சுய தனிமைப்படுத்தல் முறையை அடுத்த வாரம் முதல் நீக்குவது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கவனம் செலுத்தியுள்ளார்.
அதற்கமைய, கொவிட் தொற்றுக்குள்ளானவர்களை பொது விற்பனை நிலையங்கள், அங்காடிகள், பொது போக்குவரத்து மற்றும் பணியிடங்களுக்கு அனுமதிக்கும் முதலாவது ஐரோப்பிய நாடு என்ற பெருமையை பிரித்தானியா தனதாக்கிக்கொண்டுள்ளது.
எனினும் பிரதமரின் இத்தீர்மானமானது அவதானத்துக்குரியது என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.