அவுஸ்திரேலியா செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!

அவுஸ்திரேலியா செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வௌிநாட்டவர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அதற்கமைய இம்மாதம் 21ம் திகதி தொடக்கம் சுற்றுலாப் பிரயாணிகளுக்காக நாட்டின் எல்லை திறக்கப்படும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 வருடங்களுக்குப் பின்னர் இவ்வனுமதி வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

கடந்த வருத்தின் ஆரம்பம் தொடக்கம் அந்நாட்டு குடிமக்கள், நிரந்தர வதிவிட அனுமதி பெற்றவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டதுடன் பின்னர் வௌிநாட்டு மாணவர்களுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது.

கொவிட் தொற்று உலகம் முழுவதும் பரவிய காரணத்தினால் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலியா தனது நாட்டின் எல்லைகளை மூடியது. எதிர்வரும் உயிர்த்த ஞாயிறு தினத்தின் பின்னர் நாட்டின் எல்லையை முழுமையாக திறக்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image